இன்பம் – கற்பியல்
LOVE - CHASTE LOVE
116 பிரிவாற்றாமை
Pirivaatraamai
(பிரிவைத் தாங்காமை)
(Pirivai Thaankaamai)
Pangs
of Separation
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. 1151
Sellaamai undēl enakkurai matrunin
Valvaravu vaazhvaark kurai.
பிரியாமை உண்டென்றால் எனக்குச்சொல் விரைந்து
வருவதை வாழ்வோர்க்குச் சொல்.
Piriyaamai undenraal enaakkuchol virainthu
Varuvathai vaazhvōrukku chol.
Tell me if you will not
leave, tell about your quick
Return, to those who survive.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. 1152
Inkan udaitthavar paarval pirivanjum
Punkan udaitthaal punarvu.
பார்வையும் இன்பம் அன்று பிரிவையஞ்சி
கூடலும் துன்பம் இன்று.
Paarvaiyum inpam anru pirivaiyanji
Koodalum thunpam inru.
Even a look was enchanting
that day, but today
The union is painful by the fear of parting.
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். 1153
Aritharō thētram arivudaiyaar kannum
Pirivō ridatthunmai yaan.
பிரிவைத் தாங்காமை அறிந்த காதலர்
இன்சொல் நம்ப முடியாது.
Pirivai thaankaamai arintha kaadhalar
Insol nampa mudiyaathu.
Cannot beleive the sweet
words of lover, who know
That the separation is
unbearable.
அளித்தஞ்சல்
என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு. 1154
Alitthanjal enravar neeppin
thelitthasol
Thēriyaark kundō thavaru.
பிரியேனஞ்சாதே
என்றவர் பிரிந்தால் தெரிவித்ததை
நம்பியதில் என்ன தவறு.
Piryēnanjaathē enravar
pirinthaal therivitthaathai
Nampiyathil enna thavaru.
Is anything wrong with those
who believe the words of
Him that ‘I am not leaving
and don’t afraid’.
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. 1155
Ompin amainthaar pirivōmpal matravar
Neenkin arithaal punarvu.
காக்கின் பிரியாமல் காக்க பிரிந்தபின்
உயிரின்றிக்
கூடுதல் அரிது.
Kaakkin piriyaamal kaakka pirinthapin
Uyirinrik kooduthal arithu.
To protect, protect from
separation, it is rare
To rejoin without life after
that.
பிரிவுரைக்கும்
வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. 1156
Pirivuraikkum vankannar aayin
arithavar
Nalkuvar ennum nasai.
பிரிவுரைக்கும்
கொடியவர் என்றால் திரும்பி
அன்புரைப்பார்
என்பது வீணாசை.
Pirivuraikkum kodiyavar enraal thirumpi
Anpuraippaar enpathu veenaasai.
It is desperate to wish that
he will return to make love,
If he is hard hearted to
declare the separation.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. 1157
Thuraivan thuranthamai thootraakol
munkai
Iraiiravaa ninra valai.
தலைவன் பிரிந்ததைத் தெரிவிக்காதோ எல்லோருக்கும்
முன்கை கழலும் வளையல்.
Thalaivan pirinthathai therivikkaathō ellōrukkum
Munkai kazhalum valaiyal.
Will the bangles slipping down from the wrist, declare to
All about the separation of
my lover.
இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு. 1158
Innaa thinaniloor vaazhthal
athaninum
Innaa thiniyaarp pirivu.
துன்பம் தோழியர் இல்லாவாழ்வு அதனினும்
துன்பம் காதலர் பிரிவு.
Thunpam thōzhiyar
illaavaazhvu athaninum
Thunpam kaadhalar pirivu.
It is painful to live without
a close friend, separation
Of lover is more painful than
it.
தொடிற்சுடின்
அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1159
Thodirsudin allathu kaamanōy pōla
Vidirsudal aatrumō thee.
தொட்டால் சுடுமன்றி காமநோய் போல
விட்டால் சுடுமோ தீ.
Thottaal sudumanri kaamanōy pōla
Vittaal sudumō thee.
Will the fire, that burns one
who touch it,
Burn when detach, like the
love.
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். 1160
Arithaatri allalnōy neekkip pirivaatrip
Pinnirunthu vaazhvaar palar.
பிரிந்து அதன்துன்பம் நீக்கி பொறுத்துப்
பின்னரும் வாழ்வார் பலர்.
Pirinthu athanthunpam neekki porutthu
Pinnarum vaazhvaar palar.
There are many, who left by
partners, then clear the
Pain, bear it and live again.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post