பொருள் – அரசியல்
WEALTH – POLITICS
50 இடனறிதல்
Idanarithal
Selecting
the Place
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது. 491
Thodankarka evvinaiyum
ellarka mutrum
Idankanda pinnal lathu.
தொடங்காதே எதையும் இகழாதே முற்றுகைக்கு
இடங்கண்ட பின் அல்லாது.
Thodankaathē ethaiyum
ikazhaathē mutrukaikku
Idamkanda pin allaathu.
Do not start any action or
comment, unless you
Find a correct place to
operate from.
முரண்சேர்ந்த
மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 492
Muransērntha moympi navarkkum aransērnthaam
Aakkam palavum tharum.
முரண்பட்ட வலிமை உடையார்க்கும் அரண்சேர்ந்த
வெற்றி பயன்பல தரும்.
Muranpatta valimai udaiyaarkkum aransērntha
Vetri payanpala tharum.
Even those who have different strength will yield many
When being attached to the
fort.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். 493
Aatraarum aatri adupa
idanarinthu
Pōtraarkan pōtris seyin.
இடமறிந்து தம்மைக்காத்துப் பகைசென்று செய்தால்
இல்லாதாரும்
வலியவராய் வெல்வார்.
Idamarinthu thammaikkaatthu pakaisenru seythaal
Illaathaarum valiyavaraay velvaar.
Even the weak force will win over the mightier, if they
Attack knowing the place and
safeguard self.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494
Enniyaar ennam izhappar
idanarinthu
Thunniyaar tunnis seyin.
பகைவர் எண்ணம் இழப்பார் இடமறிந்து
தக்கபடி நெருங்கித் தாக்கின்.
Pakaivar ennam izhappaar idamarinthu
Thakkapadi nerunkit thaakkin.
The enemy will lose the will,
if you reach
The proper place and attack.
நெடும்புனலுள்
வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. 495
Nedumpunalul vellum muthalai
adumpunalin
Neenkin athanaip pira.
ஆழ்நீரில் வெல்லும் முதலை கரைவந்தால்
கொல்லும் அதனை மற்றவை.
Aazhneeril vellum muthalai karaivanthaal
Kollum athanai matravai.
The crocodile which wins in the deep water, will be
Killed by others when came to
the shore.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496
Kadalōdaa kaalval nedunthēr kadalōdum
Naavaayum odaa nilatthu.
பெருஞ்சக்கர
நெடுந்தேர் கடலோடாது கடலோடும்
பெருங்கப்பல்
நிலத் தோடாது.
Perunchakkara nedunthēr kadalōdaathu kadalōdum
Perumkappal nilat thōdaathu.
The chariot with giant wheels
will not run in the sea,
And the big ship will not run
in the streets.
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின். 497
Anjaamai yallaal thunaivēndaa enjaamai
Enni yidatthaar seyin.
அஞ்சாமை அல்லாமல் துணைவேண்டாம் குறையின்றி
சிந்தித்து இடம்கண்டு செய்யின்.
Anjaamai allaamal thunaivēndaam kuraiyinri
Sinthitthu idamkandu seyyin.
Nothing but courage is required, if you think thoroughly
And find a proper place for
your deed.
சிறுபடையான்
செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498
Sirupadaiyaan sellidam sērin urupadaiyaan
Ookkam azhinthu vidum.
சிறுபடையான்
செல்லிடம் சேர்ந்தால் பெரும்படையான்
ஊக்கம் அழிந்து விடும்.
Sirupadaiyaan sellidam sērnthaal perumpadaiyaan
Ookkam azhinthu vidum.
Even a big army will lose
power if it reaches
A place meant for a small
army.
சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது. 499
Sirainalanum seerum ilareninum
maanthar
Urainilatthō dotta larithu.
வலிமை சிறப்பு இல்லெனினும் பகைவர்
இடம்சென்று தாக்குதல் அரிது.
Valimai sirappu illeninum pakaivar
Idamsenru thaakkuthal arithu.
It is difficult to win in an
enemy’s land even if they
Had not much strength and
greatness.
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. 500
Kaalaazh kalarin nariadum
kannanjaa
Vēlaal mukattha kaliru.
காலிழுக்கும்
சேற்றில் நரிகொல்லும் வேல்வீரர்
கோர்த்த கொம்புடை யானையை.
Kaalizhukkum sētril
narikollum vēlveerar
Kōrttha kompudai yaanaiyai.
An elephant whose trunk
pierced warriors in war will
Be killed by a jackal, if its
legs sink in mud.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post