Wednesday, 28 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 110

 


இன்பம்களவியல்

LOVE - STEALTHY LOVE

 

110  குறிப்பறிதல்

Kuripparithal

Knowing the Indications

 

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.             1091

Irunōk kivalunkan ulla thorunōkku

Nōynōkkon rannōy marunthu.                  

இருபார்வை இவள் மைகண்ணில் ஒருபார்வை

நோய் ஒன்றதன் மருந்து.

Irupaarvai ival maikannil orupaarvai

Nōy onrathan marunthu.

Two looks in her beautiful eyes, one look is

Disease and the other is its remedy.

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.                                  1092

Kankalavu kollum sirunōkkam kaamatthil

Sempaakam anru perithu.                          

கண்களவு கொள்ளும் சிறுபார்வை காமத்தில்

பாதியல்ல பெரும் பகுதி.

Kankalavu kollum sirupaarvai kaamatthil

Paathiyalla perum pakuthi.

Stealthy glance by the corner of eyes is not the  

Half, but the big part of love.

 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.                                       1093

Nōkkinaal nōkki irainjinaal ahthaval

Yaappinul attiya neer.                                            

நோக்கினாள் கண்டதும் குனிந்தாள் அதவள்

அன்பில் வார்க்கும் நீர்.

Nōkkinaal kandathum kuninthaal athaval

Anpil vaarkkum neer.

She looks, bowed head when I see, that is

The water poured on love by her.

 

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்.                                 1094

Yaanōkkun kaalai nilanōkkum nōkkaakkaal

Thaanōkki mella nakum.                           

நான்பார்க்க நிலம் பார்ப்பாள் பார்க்காவேளை

எனைப்பார்த்து மெல்ல சிரிப்பாள்.

Naanpaarkka nilam paarppaal paarkkaavēlai

Enaippaartthu mella sirippaal.

When I look, she will look down, when I don’t,

She will look at me and smile gently.

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.                          1095

Kurikkondu nōkkaamai allaal orukan

Sirakkanitthaal pōla nakum.                     

குறித்துப் பார்க்காமை அல்லாமல் ஒருகண்

சுறுங்கினாள் போல சிரிப்பாள்.

Kuritthu paarkkaamai allaamal orukan

Surunkinaal pōla sirippaal.

Without looking straight, she will look

At me in sideways and enjoy.

 

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.                                       1096

Uraa thavarpōr solinum seraarsol

Ollai unarap padum.                                               

புறத்தே அயலார்போல் சொன்னாலும் பகையல்லார்

சொல்லென விரைவில் உணரும்.

Puratthē ayalaarpōl sonnaalum pakaiyallaar

Sollena viraivil unarum.

Even talking like strangers, the words of lovers

Can be easily understood soon.

 

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.                           1097

Seraas sirusollum setraarpōl nōkkum

Uraarpōn rutraar kurippu.                                     

பகையில்லாக் கடுஞ்சொல் பகைவர்போல் பார்வை

அயலார்போல் அன்புற்றவர் குறிப்பு.

Pakaiyillaa kadumsol pakaivarpōl paarvai

Ayalaarpōl anputraar kurippu.

Hard words without enmity, staring like foes are

The signs of lovers behaving like strangers.

 

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.                                         1098

Asaiyiyar kundaandōr ēeryaan nōkkap

Pasaiyinal paiya nakum.                            

மெல்லிய அசைவுக்கு உண்டோரழகு நான்நோக்க

அன்பினால் மெல்ல சிரிப்பாள்.

Melliya asaivukku undōrazhaku naannōkka

Anpinaal mella sirippaal.

The tender move has a beauty, when I look,

She will smile gently with love.

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.                                           1099

Ēthilaar pōlap pothunōkku nōkkuthal

Kaathalaar kannē ula.                                             

அயலார்போல் பொது நோக்கில் பார்த்தல்

காதல் கொண்டார் இயல்பு.

Ayalaarpōl pothu nōkkil paartthal

Kaadhal kondaar iyalpu.

Looking generally like strangers is the character 

Of those who are in love.

 

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.                                                  1100

Kannodu kanninai nōkkokkin vaaysorkal

Enna payanum ila.                                                  

கண்ணோடு கண்பார்வை ஒத்திருந்தால் வாய்ச்சொற்கள்

எப்பயனும் இல்லாமல் போகும்.

Kannōdu kanpaarvai otthirunthaal vaaychorkal

Eppayanum illaamal pōkum.

If the eyes united, when looking each other, the

words Of mouth will become useless.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post