பொருள் – அரணியல்
WEALTH – FORT
74 நாடு
Naadu
The
Nation
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு. 731
Thallaa vilaiyulum thakkaarum
thaazhvilaas
Selvarum sērvathu naadu.
குறையா விளைதரும் உழவரும் அறிஞரும்
செல்வரும் சேர்வது நாடு.
Kuraiyaa vilaitharum uzhavarum arinjarum
Selvarum sērvathu naadu.
The nation is one have
farmers giving minimum
Good harvest, the saints and
the rich.
பெரும்பொருளாற்
பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. 732
Perumporulaar pettakka thaaki
arunkēttaal
Aatra vilaivathu naadu.
பெரும்பொருள்
உடைய பிறர்விரும்ப அழிவில்லா
விளை தருவது நாடு.
Perumporul udaiya pirarvirumpa azhivillaa
Vilai tharuvathu naadu.
The country is which have
great assets, as others like
And gives good harvest
without destruction.
பொறையொருங்கு
மேல்வருங்கால்
தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு. 733
Poraiyorunku mēlvarunkaal thaanki iraivar
Kiraiyorunku nērvathu naadu.
குடியேறும் பிறர்சுமை தாங்கி மன்னனுக்கு
இறைபொருள் தரவல்லது நாடு.
Kudiyērum pirarsumai thaanki mannanukku
Iraiporul tharavallathu naadu.
The country is which, capable
of bearing refugees
And paying the taxes to the
king.
உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. 734
Urupasiyum ovaap piniyum
serupakaiyum
Sēraa thiyalvathu naadu.
பெரும்பசியும்
நீங்காத நோயும் வெளிப்பகையும்
இல்லா தமைவது நாடு.
Perumpasiyum neenkaatha nōyum velippakaiyum
Illaa thamaivathu naadu.
The ideal country is which
didn’t have big hunger,
Incurable deseases and
enemies.
பல்குழுவும்
பாழ்செய்யும்
உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. 735
Palkuzhuvum paazhseyyum utpakaiyum vēnthalaikkum
Kolkurumpum illathu naadu.
குழுக்களும்
கெடுக்குமுட்பகையும்
வேந்தனை வருத்தும்
குறுநிலக்கொலையும்
இல்லாதது நாடு.
Kuzhukkalum
kedukkumutpakaiyum vēnthanai varutthum
Kurunilakkolaiyum illaathathu naadu.
The ideal nation is which had
no groups, inside foes
And murderous subordinate
chiefs.
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. 736
Kēdariyaak ketta idatthum valamkunraa
Naadenpa naattin thalai.
கெடாத அரிதாகக் கெட்டாலும் வளம்குன்றாத
நாடே நாடென்பர் அறிஞர்.
Kedaatha arithaaka kettaalum valamkunraatha
Naadē naadenpar arinjar.
The wise call a country which
does not perish and
Withstand the rare
destruction as country.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு. 737
Irupunalum vaayntha malaiyum
varupunalum
Vallaranum naattir kuruppu.
இருநீர் வளமும் மலையும் மழைநீரும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
Iruneer valamum malaiyum mazhaineerum
Vallaranum naattirku uruppu.
The twin source of water,
mountain, rainwater and
Strong fort are the organs of
a kingdom.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. 738
Piniyinmai selvam vilaivinpam
ēmam
Aniyenpa nattirkiv vainthu.
நோயின்மை செல்வம் விளைவின்பம் காவல்
ஐந்தும் அழகென்பர் நாட்டிற்கு.
Nōyinmai selvam vilaivinpam kaaval
Ainthum azhakenpar naattirku.
Health, wealth, harvest, joy
and protection
Are the five decorations of a
nation.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு 739
Naadenpa naadaa valatthana
naadalla
Naada valamtharum naadu.
வருந்த செல்வம்தரும் நாடு நாடல்ல
வருந்தாது தருவதே நாடு.
Varuntha selvamtharum naadu naadalla
Varunthaathu tharuvathē naadu.
Country that gives wealth
without pain is the country,
Not the country which gives
with pain.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. 740
Aankamai veythiyak kannum
payaminrē
Vēnthamai villaatha naadu.
சொன்னதெல்லாம்
அமைந்தும் பயனின்றிப் போய்விடும்
நல்லரசன் அமையா நாட்டில்.
Sonnathellaam amainthum payaninri pōyvidum
Nallarasan amaiyaa naattil.
Even had everything noted,
they will become useless,
If there is no good king to
rule.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post