Monday, 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 49



பொருள்அரசியல்

WEALTH – POLITICS

                                                                          

49  காலமறிதல்

Kaalamarithal

Time Sense

 

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.                                  481

Pakalvellum kookaiyaik kaakkai ikalvellum

Vēntharkku vēndum pozhuthu.    

ஆந்தையை பகல்வெல்லும் காகம் போல

வேந்தர்க்கும் வேண்டும் காலம்.

Anthaiyai pakalvellum kaakam pōla

Vēntharkkum vēndum kaalam.

Just as the crow beats the owl in the daytime,

The king also should have suitable time.

 

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.                                        482

Paruvatthō dotta ozhukal thiruvinait

Theeraamai aarkkum kayiru.

காலம் பொருந்தி நடத்தல் செல்வத்தை

செல்லாது காக்கும் கயிறு.

Kaalam porunthi nadatthal selvatthai

Sellaathu kaakkum kayiru.

To act according to the time is the rope to

Bind the wealth to keep secure.

 

அருவினை யென்ப உளவோ கருவியான்

கால மறிந்து செயின்.                                              483

Aruvinai enpa ulavō karuviyaan

Kaala marinthu seyin.

அரியசெயல் ஏதேனும் உண்டோ கருவியும்

காலமும் அறிந்து செய்யின்.

Ariyaseyal ēthaenum undō karuviyum

Kaalamum arinthu seyyin.

Is anything impossible, if done knowing

The proper tool and time.

 

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.                                        484

Njaalam karuthinum kaikoodum kaalam

Karuthi idatthaar seyin.   

ஞாலமே வேண்டினும் கைகூடும் இடம்

காலம் கருதிச் செய்யின்.

Njaalamē vēndinum kaikoodum idam

Kaalam karuthi cheyyin.

You can conquer the world if want, if you

Act in proper place and time,

 

காலங் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்.                                                  485

Kaalam karuthi iruppar kalankaathu

Njaalam karuthu pavar. 

காலம் கருதி காத்திருப்பார் கலங்கார்

ஞாலம் கருதி இருப்பார்.

Kaalam karuthi kaatthiruppaar kalankaar

Njaalam karuthi iruppaar.

Who want the world, will not agitate, but

Will wait for the correct time.

 

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.                                  486

Ookka mudaiyaan odukkam poruthakar

Taakkarkup pērum thakaitthu.

ஊக்க முடையான் அடங்குவது போரிடும்கடா

தாக்க பின்வாங்குதல் போல.

Ookka mudaiyaan adankuvathu pōridumkadaa

Thaakka pinvaankuthal pōla.

Who have power but stand patiently is like the

Fighter ram retreating to charge.

 

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.                                     487

Pollena aankē puramvēraar kaalampaart

Thulvērppar olli yavar.    

அறிவுடையார் புறத்தில் சினம் கொள்ளார்

காலம்பார்த்துக் காத்தி ருப்பார்.

Arivudaiyaar puratthil sinam kollaar

Kaalampaartthu kaatthi ruppaar.

The wise will not show the anger openly, but

Will wait for the proper time.

 

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை

காணிற் கிழக்காந் தலை.                                        488

Serunaraik kaanir sumakka iruvarai

Kaanir kizhakkaam thalai. 

பகைவரைக் காணின் பொறுத்திடு முடிவுகாலம்

அவர்தலை கீழே வரும்.

Pakaivarai kaanin porutthidu mudivukaalam

Avarthalai keezhē varum.

Wait patiently when seeing foes, in the end

Their head will come down.

 

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.                                              489

Eythar kariya thiyainthakkaal annilaiyē

Seythar kariya seyal.

அரிய காலம் வாய்க்க அவ்வாய்ப்பினால்

அரிய செயல்கள் செய்க.

Ariya kaalam vaaykka avvaayppinaal

Ariya seyalkal seyka.

Avail the rare opportunity, and using that

Accomplish the rare deeds.

 

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.                                      490

Kokkokka koompum paruvatthu matrathan

Kutthokka seerttha idatthu.           

கொக்குபோல் காத்திடு காலத்திற்கு பின்

கொத்தி முடித்திடு தவறாமல்.           

Kokkupōl kaatthidu kaalaththirku pin

kotthi Muditthidu thavaraamal.

Wait patiently like a crane for the time, then

Strike and finish precisely.

 

 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post