பொருள் – அமைச்சியல்
WEALTH – MINISTRY
65 சொல்வன்மை
Solvanmai
(பேச்சுத்திறன்)
(Pētcchu Thiran)
Eloquence
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று. 641
Naanala mennum nalanudaimai
annalam
Yaanalat thullathooum
anru.
நாவன்மை எனும்நலம் சிறப்பு அந்நலம்
மற்ற நலத்துள் அடங்காது.
Naavanmai ennumnalam sirappu annalam
Matra nalatthul adankaathu.
Eloquence is a blessing, the
great, that is
Not among other blessings.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 642
Aakkamum kēdum athanaal varuthalaal
Kaatthōmpal sollinkan sōrvu.
ஆக்கமும் கேடும் சொல்லால் வருவதால்
சொல்லில் தவறின்றி காத்திடு.
Aakkamum kēdum sollaal
varuvathaal
Sollil thavarinri kaatthidu.
Wealth and worries are
brought by words, so
Avoid mistakes while
speaking.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 643
Kēttaarp pinikkum thakaiyavaayk kēlaarum
Vētpa mozhivathaam sol.
கேட்டார் மயங்கச் சொல்லி கேட்காதார்
விரும்பச் சொல்வது சொல்.
Kēttaar mayanka cholli kētkaathaar
Virumpa solvathu sol.
Word should make the listners
to be fascinated
And others to long for it.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில். 644
Thiranarinthu solluka sollai
aranum
Porulum athaninooun kil.
சொல்லின் திறனறிந்து சொல்க அதைவிட
அறம்பொருள் வேறு இல்லை.
Sollin thiranarinthu solka athaivida
Aramporul vēru illai.
Speak the word, knowing its
power, nothing is
More virtueous and wealthier
than it.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645
Solluka sollaip pirithōrsol acchollai
Vellumsol inmai arinthu.
சொல்லுக சொல்லக் கருதியதை அச்சொல்லை
வெல்லும்சொல்
இல்லையென அறிந்து.
Solluka sollak karuthiyathai acchollai
Vellumsol illaiyena arinthu.
Speak the word you want to
speak, knowing that
No other word is there to win
over it.
வேட்பத்தாஞ்
சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646
Vētpatthaam sollip pirarsor payankōdal
Maatchiyin maasatraar kōl.
பிறர்வேண்டச்
சொல்லி பிறர்சொல்ல பயன்பார்த்தல்
குறையில்லா சிறந்தார் கொள்கை.
Pirarvēnda solli pirarsolla payanpaartthal
Kuraiyillaa siranthaar kolkai.
The policy of the flawless
great is to speak as others
Like, and to grasp the
meaning of what heard.
சொலல்வல்லன்
சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647
Solalvallan sōrvilan anjaa navanai
Ikalvellal yaarkkum arithu.
சொல்வதில் வல்லவன் சோர்விலாதவன் அஞ்சானவனை
யாராலும் வெல்ல முடியாது.
Solvathil vallavan sōrvilaathavan
anjaanavanai
Yaaraalum vella mudiyathu.
One who is expert in speech,
tiredless and bold is
Rare to be defeated by
anyone.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648
Virainthu thozhilkētkum njaalam niranthinithu
Solluthal vallaarp perin.
விரைந்து கேட்டுநடக்கும் உலகம் கருத்துக்கள்
ஒருங்கினிதே
சொல்வாரைப் பெற்றால்.
Virainthu kēttunadakkum
ulakam karutthukkal
Orunkinithē solvaaraip
petraal.
The world will immediately follow the words of those,
Who talk ideas coherently and
sweetly.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649
Palasollak kaamuruvar
manramaa satra
Silasollal thētraa thavar.
பலசொல் சொல்ல நினைப்பார் குறையில்லா
சிலசொல் சொல்லத்தெரி யாதார்.
Palasol solla ninaippaar kuraiyillaa
Silasol sollattheri yaathaar.
One who didn’t know to speak
minimum pure words
Will like to speak many
words.
இணரூழ்த்தும்
நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார். 650
Inaroozhtthum naaraa
malaranaiyar katra
Thunara viritthuraiyaa thaar.
கொத்தாய் மலர்ந்தும் மலராதார் கற்றதை
பிறருணர சொல்லத்தெரி யாதார்.
Kotthaay malarnthum malaraathaar katrathai
Pirarunara sollatthēri yaathaar.
Who unable to tell what they
learned to others clearly
Are like the flowers
blossomed but not.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post