அறம் – இல்லறவியல்
VIRTUE – FAMILY LIFE
8 அன்புடைமை
Anpudaimai
Love
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். 71
Anpirkum undō adaikkunthaazh aarvalar
Punkaneer poosal tharum.
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் சிறுகண்ணீர்
அன்புடையார்
உள்ளத்தைக் காட்டும்.
Anpirkum undō adaikkumthaazh sirukanneer
Anpudaiyaar ullatthaik kaattum.
Is anything to lock love? the
tears that trickle
Will show the love inside.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72
Anpilaar ellaam thamakkuriyar
anpudaiyaar
Enpum uriyar pirarkku.
அன்பிலார் எல்லாம் தமதாக்கினார் அன்புடையார்
தன்னுடம்பும்
பிறர்க் காக்கினார்.
Anpilaar ellaam thamathaakkinaar anpudaiyaar
Thannudampum pirark kaakkinaar.
Those who do not love, take everything for themselves
Who love, give even their
body to others.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 73
Anpōdu iyaintha vazhakkenpa aaruyirkku
Enpōdu iyaintha thodarpu.
அன்பு பொருந்திய வாழ்வு உடம்போடு
ஆருயிர் பொருந்திய உறவு.
Anpu porunthiya vaazhvu udampōdu
Aaruyir porunthiya uravu.
The life linked with love is
like the relation of
The body with the soul.
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. 74
Anpeenum aarvam udaimai
athueenum
Nanpennum naada sirappu.
அன்பு பிறரை விரும்பிடச்செய்யும் நட்பெனும்
பெரும் சிறப்பையும் தரும்.
Anpu pirarai virumpidacheyyum natpenum
Perum sirapppaiyum tharum.
The love make others to love,
and gives
The friendship, the
greatness.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75
Anputru amarntha vazhakkenpa
vaiyakatthu
Inputraar eythum sirappu.
அன்புற்றுவாழும்
வாழ்க்கைப் பயனே உலகில்
இன்புற்று வாழ்வார் சிறப்பு.
Anputruvaazhum vaazhkkaip payanē ulakil
Inputru vaazhvaar sirappu.
The greatness of those who
live with joy in the world
Is the result of life lived
with love.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76
Aratthirkē anpusaar penpa ariyaar
Maratthirkum ahthē thunai.
அறத்திற்கே அன்புதுணை என்பவர் அறியார்
வீரத்திற்கும்
அதுவே துணை.
Aratthirkē anputhunai enpavar ariyaar
Veeratthirkum athuvē thunai.
The ignorant will say that the love is companion of virtue,
But it is the companion of
courage too.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 77
Enpi lathanai veyilpōlak kaayumē
Anpi lathanai aram.
எலும்பில்லாப்
புழுவை வெயில் வாட்டுவதுபோல்
அன்பிலாதுயிரை
அறம் வருத்தும்.
Elumpillaa puzhuvai veyil vaattuvathupōl
Anpilathuyirai aram varutthum.
As the Sun scorches the
boneless worm, virtue
Will torture one who has no
love.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
Anpakat thillaa uyirvaazhkkai
vanpaarkan
Vatral maranthalirt
thatru.
அகத்தில் அன்பில்லா வாழ்க்கை பாலைவனத்தில்
பட்டமரம் தளிர்த்தது போல.
Akatthil anpillaa vaazhkkai paalaivanatthil
Pattamaram thalirtthathu pōla.
The life without love inside
is like a withered tree,
Sprouting in the desert.
புறத்துறுப்
பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு. 79
Puratthurup pellaam
evanseyyum yaakkai
Akatturup panpi
lavarkku.
புறத்து உறுப்புக்களால் என்னபயன் அகத்து
உறுப்பாம் அன்பு இல்லார்க்கு.
Puratthu uruppukalaal ennapayan akatthu
Uruppaam anpu illaarkku.
What is the use of the
external organs, if one does not
Have internal organ, that is
love.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 80
Anpin vazhiyathu uyirnilai ahthilaarkku
Enputhōl pōrttha udampu.
அன்பில் இயங்குவதே உயிர்நிலை அதில்லார்க்கு
எலும்புத்தோல்
போர்த்திய உடம்பு.
Anpil iyankuvathē uyirnilai athillaarkku
Elumputthōl pōrtthiya udampu.
Life lead with love is living
life, while without love,
It is just bones covered by the
skin.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post