இன்பம் – கற்பியல்
LOVE - CHASTE LOVE
131 புலவி
Pulavi
(ஊடல்)
(Ootal)
Feigned
Anger
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301
Pullaa thiraap pulatthai
avarurum
Allalnōy kaankam sirithu.
தழுவா திருந்துப் பிணங்கு அதனால்
துன்பநோய் காண்கச் சிறிது.
Thazhuvaa thirunthu pinanku aathanaal
Thunpanōy kaanka sirithu.
Don’t embrace and neglect, by
that
See the sickness a little.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். 1302
Uppamain thatraal pulavi
athusirithu
Mikkatraal neela vidal.
உப்பின் அளவே ஊடல் சிறிது
நீட்டித்தல்
அளவு மிகுதல்.
Uppin alavē oodal
sirithu
Neettithal alavu mikuthal.
The neglecting should be like
salt, adding a
Bit more is lengthening it.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரை புல்லா விடல். 1303
Alanthaarai allalnōy seythatraal thammaip
Pulanthaaraip pulla vidal.
துன்புற்றாரை
மேலும் வருத்துவதுபோல் தம்மோடு
பிணங்கியாரைத்
தழுவா ஊடல்.
Thunputraarai mēlum
varutthuvathupōl thammōdu
Pinankiyaarait thazhuvaa oodal.
Avoiding the feighned lover
without embracing
Is like torturing one already
suffered.
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. 1304
Oodi yavarai unaraamai
vaadiya
Valli muthalarin thatru.
ஊடல் செய்வாரை உணராமை வாடிய
கொடியின் அடி அறுத்தல்.
Oodal seyvaarai unaraamai vaadiya
Kodiyin adi arutthal.
Not understanding the feigned
lover is like
Cutting the root of a
withered plant.
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலந்தகை
பூவன்ன கண்ணார் அகத்து. 1305
Nalatthakai nallavark kēer pulatthakai
Poovanna kannaar akatthu.
நற்பண்புடைய
ஆடவர்க் கழகு ஊடல்சிறப்பே
பூப்போன்ற கண்ணாள் நெஞ்சில்.
Narpanpudaiya aadavark
kazhaku oodalsirappē
Pooppōnra kannaal nenjil.
The feighning act is the
beauty of men with good characters
In the mind of flower eyed
belle.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. 1306
Thuniyum pulaviyum illaayin
kaamam
Kaniyum karukkaayum atru.
பிணக்கும் ஊடலும் இல்லாக்காமம் மிகப்பழுத்த
பழுக்காத பழம் போன்றது.
Pinakkum oodalum illaakkaamam mikappazhuttha
Pazhukkaatha pazham pōnrathu.
Love without feigning and
frowning is like
The over riped or raw fruit.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. 1307
Oodalin undaankōr thunpam punarvathu
Needuva thanrukol enru.
ஊடலும் ஓர்வகைத் துன்பம் கூடுதல்
நீளாதோ என்றேங்கு வதால்.
Oodalum orvakai thunpam kooduthal
Neelathō enrēnku vathaal.
Feigning also a type of
distress, because it
Make to long for extension.
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி. 1308
Nōthal evanmatru nonthaaren rahthariyum
Kaathalar illaa vazhi.
வருந்துவதால்
என்னபயன் வருந்தியது நம்மாலென
காதலர் அறியா விட்டால்.
Varunthuvathaal ennapayan varunthiyathu nammaalena
Kaadhalar ariyaa vittaal.
What is the use of suffering,
if the lover didn’t know
That the suffering was by
himself.
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. 1309
Neerum nizhala thinithē pulaviyum
Veezhunar kannē inithu.
நீரும் நிழலிடத்தே இனிது ஊடலும்
அன்புடையா ரிடமே இனிது.
Neerum nizhalidatthē inithu
oodalum
Anpudaiyaa ridamē inithu.
The water is sweet in the
shadows, sulking also
Sweet when it is with one who
loves.
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா. 1310
Oodal unanka viduvarō dennenjam
Kooduvēm enpa thavaa.
ஊடலை வாட விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவோம் என்பது ஆசை.
Oodalai vaada viduvaarōdu ennenjam
Kooduvōm enpathu aasai.
My heart sought the union
with one who allows the
Sulking to dry up is mere
desire.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post