Tuesday, 20 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 1



 

 

அறம் பாயிரம்

VIRTUE  -   PREFACE

 

1  இறை வாழ்த்து

Irai Vaazhtthu

(வழிபாடு)

(Vazhipaatu)

Prayer

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.                                                1

Akara muthala ezhuthellaam aathi                                   

Pakavan muthatre ulaku.                                       

அகரம் எழுத்திற்கு ஆரம்பம் முதல்

கடவுள் உலகிற்கு ஆரம்பம்.

Akaram ezhuthirku aarambam muthal

Kadavul ulakirku aarambam.

A, the beginning of words, God, the

Almighty, the beginning of world.

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழாஅர் எனின்.                               2

Katrathanaal aaya payanenkol vaalarivan                      

Natraal thozhaa-ar enin.                                        

படித்தும் படிப்பின் பயனென்ன எல்லாமறிந்தவன்

பாதங்களைத் தொழா விட்டால்.

Paditthum padippin payanenna ellaamarinthavan

Paadhankalai thozhaa vittaal.  

What the use of education, if didn’t bow before

The feet of one, who knows everything.

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.                                                3

Malarmisai ēkinaan maanadi sērnthaar   

Nilamisai needuvazh vaar.            

அன்பக மலரில் வீற்றவனடி சேர்ந்தார்

இன்புலகில் நீடுழி வாழ்வார்.

Anbaka malaril veetravanadi sērnthaar

Inbulakil needoozhi vaazhvaar.

Who follow the feet of one, lives in the flower of love,

Will live long happily in the happy world.

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.                                  4

Vēnduthal vēndaamai ilaanadi sērnthaarkku

Yaandum idumpai ila.                               

விருப்பு வெறுப்பு இல்லாதவனடி சேர்ந்தார்க்கு

என்றுமெங்கும் துன்ப மில்லை.

Viruppu veruppu illaathavanadi sērnthaarku

Enrumenkum thunpa millai.

No suffering anywhere, anytime for the follower of

One, who have no likes and dislikes.

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                   5

Irulsēr iruvinaiyum sēraa iraivan             

Porulsēr pukazhpurinthaar maattu.

அறியாமைதன் இருவினையும் சேராது இறைவன்

நற்புகழ்விரும்பி வேண்டுவா ரிடம்.

Ariyaamaithan iruvinaiyum sēraathu iraivan

Narpukazhvirumpi vēnduvaa ridam.

Both the effects of ignorance will not reach one,

Who pray for the glory of God.

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.                               6

Porivaayil ainthavitthaan poytheer ozhukka     

Nerininraar needuvazh vaar.         

ஐம்பொறிகளை அடக்கியவன் பொய்யில்லா ஒழுக்க

நெறிநின்றவர் நீடுழி வாழ்வார்.

Aimporikalai adakkiyavan poyilla ozhukka Nerininravar needoozhi vaazhvaar.

Who follow the path of one, who controlled 

The senses with conduct, will live long.

 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.                              7

Thanakkuvamai illaathaan thaalsērnthaark kallaal

Manakkavalai maatral arithu.

தனக்குவமை இல்லாதவனடி பொருந்தி நினைக்காமல்

மனக்கவலை மாற்ற முடியாது.

Thanakkuvamai illaathavanadi porunthi ninaikkaamal

Manakkavalai maatra mudiyaathu.

Who did not follow the feet of pearless one,

Could not clear the grief in mind.

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.                                            8

Aravaazhi anthanan thaalsērnthark kallaal        

Piravaazhi neenthal arithu.            

அறக்கடலாம் அவனடி பொருந்தி நினைக்காமல்

பிறக்கடல் நீந்த முடியாது.

Arakkadalaam avanadi porunthi ninaikkaamal

Pirakkadal neentha mudiyaathu.

One cant swim other seas, without joining the feet of

The God, the sea of virtues.

 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.                                 9

Kōlil poriyin kunamilavē enkunatthaan             

Thaalai vanankaat thalai.   

கேளாச்செவி காணாக்கண் போன்றது எண்குணத்தான்

திருவடி வணங்காத் தலை.

Kēlaacchevi kaanaakan pōnrathu enkunatthaan

Thiruvadi vanankaat thalai.

The head, doesn’t bow to the feet of God, is like

The blind eye and the deaf ear.

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.                                   10

Piravip perunkadal neenthuvar neenthaar

Iraivan adisēraa thaar.                                

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தமாட்டார்

இறைவனடி பின் பற்றார்.

Piravi perunkadal neenthuvaar neenthamaattaar

Iraivanadi pin patraar.

Follower of the feet of God, will swim the sea of

Birth, others will not swim.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post