Wednesday, 28 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 128



 

இன்பம்கற்பியல்

LOVE - CHASTE LOVE

                                                                          

128 குறிப்பறிவுறுத்தல்

Kuripparivurutthal

(குறிப்பால் அறிவித்தல்)

 (Kurippaal Ariviththal)

Exchanging Indications

 

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.                         1271

Karappinum kaiikan thollaanin unkan

Uraikkal uruvathon rundu.                       

மறைத்தாலும் நிற்காமல் உனைக்கடந்து உன்கண்கள்

உரைக்கும் செய்தியொன் றுண்டு.

Maraitthaalum nirkaamal unaikkadanthu unkankal

Uraikkum seythiyon rundu.

Even if you hide, there is a message that your eyes

Says after breaking your barriers.

 

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.                               1272

Kanniraintha kaarikaik kaampērthōt pēthaikkup

Penniraintha neermai perithu.                   

கண்ணிறைந்த அழகி மூங்கில்தோள் காதலிக்குப்

பெண்மை இயல்பு பெரிது.

Kanniraintha azhaki moonkilthōl kaadhalikkup

Penmai iyalpu perithu.

My darling with eye-filling beauty and stem shoulder

Has more feminine characters.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன் றுண்டு.                        1273

Maniyil thikazhtharu noolpōl madanthai

Aniyil thikazhvathon rundu.                                 

மணியில் விளங்கும் நூல்போல மடந்தை

அழகில் விளங்குவதொன் றுண்டு.

Maniyil vilankum noolpōla madanthai

Azhakil vilankuvathon rundu.

As the thread shine in the pearl ornament, there is

Something in the beauty of the innocent.

 

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.                 1274

Mukaimokkul ullathu naatrampōl pēthai

Nakaimokkul ullathon rundu.                   

அரும்புக்குள் உள்ள மணம்போல பேதை

புன்சிரிப்புக் குள்ளொன் றுண்டு. 

Arumpukkul ulla manampōla pēthai

Punsirppuk kullon rundu.

As the fragrance in the blossoming bud, there is

Something in the smile of the innocent.

 

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.                          1275

Serithodi seythirantha kallam uruthuyar

Theerkkum marunthon rudaitthu.                        

சிறுபார்வை செய்திட்ட கள்ளக் குறிப்பில்

நோய்தீர்க்கும் மருந்தொன் றுண்டு. 

Sirupaarvai seythitta kallak kurippil

Nōytheerkkum marunthon rundu.

There is a medicine in the secret indication by a

Cunning look, to cure my disease.

 

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.                              1276

Perithaatrip petpak kalatthal arithaatri

Anpinmai soozhva thudaitthu.                  

பேரன்புகாட்டி விரும்பக் கூடுதல் அரியபிரிவும்

அன்பில்லா கைவிடலும் குறிக்கும்.

Pēranpukaatti virumpak kooduthal ariyapirivum

Anpillaa kaividalum kurikkum.

The pleasurable union with extreme love will indicate

Rare separation and loveless abandoning.

 

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.                                     1277

Thannam thuraivan thananthamai namminum

Munnam unarntha valai.                            

குளிர்துறை காதலன் பிரிவதை நம்மைவிட

முன்னே உணர்ந்தன வளையல்.

Kulirthurai kaadhalan pirivathai nammaivida

Munnē unarnthana valaiyal.

The bangles had undestood the departure of lover

In the cool shores, even before me.

 

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.                                      1278

Nerunatrus senraaren kaathalar yaamum

Ezhunaalēm mēni pasanthu.                      

நேற்றுதான் சென்றார் காதலர் ஏழுநாள்போல்

பசந்துள்ளது என் மேனி. 

Nētruthaan senraar kaadhalar ēzhunaalpōl

Pasanthullathu en mēni.

My lover left only yesterday, my body became

Pale as seven days passed.

 

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.                                       1279

Thodinōkki menthōlum nōkki adinōkki

Ahthan davalsey thathu.                            

வளைநோக்கி தோள்நோக்கி அடிநோக்கி அவள்செய்த

குறிப்பு உடன் செல்வதே. 

Valainōkki thōlnōkki adinōkki avalseytha

Kurippu udan selvathē.

The indications she give by looking at bangles, shoulders 

And feet are only to follow behind.

 

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.                                      1280

Penninaar penmai udaitthenpa kanninaal

Kaamanōy solli iravu.                                            

பெண்மையினும் பெண்மை உடையதென்பார் கண்ணினால்

காமநோய் சொல்லி இரத்தல்.

Penmaiyinum penmai udaiyathenpaar kanninaal

Kaamanōy solli iratthal.

What is more femine than feminity is to beg by 

Telling the love sickness through the eyes.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post