நண்பர்களே,
சிறுவயதிலிருந்தே மொழிகளை கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். கேரளத்தில் பள்ளிக்கூடத்தில் மலையாள வழியாக படித்ததனால்
மலையாளத்தை கற்றுக்கொண்டேன். அது தான் என்னுடைய தாய்மொழியும் கூட! அதற்கு இணையாக
தமிழையும் கற்றுக்கொண்டேன். ஏனென்ன்றால் அது ஏன் பாட்டி மொழி. என்னுடைய பாட்டி
மொழியைப் பற்றி னான என்னுடைய ‘திருக்குறள் எளியகுறள்’ நூலின் முகவுரையில்
சொல்லியிருக்கிறேன். மூன்றாவது வகுப்பிலிருந்து ஆங்கிலமும், ஐந்தாவது வகுப்பிலிருந்து ஹிந்தியும் கற்றுக்கொள்ள
ஆரம்பித்தேன்..
அதன் பிறகு திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்தபிறகு தெலுங்கையும் கன்னடத்தையும் கற்றுக்கொண்டேன்.
வழக்கமாக நான்
என்னுடைய நண்பர்கள் மொழிகளை கற்றுக்கொள்ள உதவுவேன். எனக்கு பாடம்
சொல்லிக்கொடுப்பது மிகவும் பிடிக்கும். அதனாலேயே தமிழ், மலையாளம், அங்கிலம் என
கற்றுக்கொள்ள ஆசைப்படும் நண்பர்களுக்கு நான் உதவுதனுண்டு.
அப்படி நண்பர்கள்
தமிழ், மலையாளம், அங்கிலம் கற்றுகொள்ள உதவுவதற்காகவே இங்கே பல வீடியோக்களை
பதிவேற்றியிருந்தேன். எல்லாவற்றையும் ஒரு பயிற்சியாகவே செய்துவந்தேன். ஆனால்
இப்பொழுது என் என்னத்தை மாற்றிக்கொண்டுள்ளேன். தற்பொழுது ஆங்கிலத்தை மட்டுமே சொல்லிக்கொடுக்க
விரும்புகிறேன். அதுதான் புதிய முடிவு.
எஹற்கு ஆங்கிலம்
என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் இந்தியாவில் ஆங்கிலம் ஓர் மொழி மட்டுமல்ல. நம்
நாட்டில் ஆங்கிலம் அதிகாரத்தின் அடியாம் மற்றும் அறிவின் அடையாளம்! நீங்கள்
ஆங்கிலத்தில் பேசினால், உங்களுக்கு அறிவாளி என்று மற்றவர்கள் மரியாதை தருவார்கள்.
உங்கள் மொழியிலேயோ அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் உங்களுக்கு அந்த அளவுக்கு மதிக்க
மாட்டார்கள்.
இந்தியாவில்
நிறையப்பேர் தங்கள் ஊர் மொழியில், தாய்மொழியில் அல்லது வட்டார மொழியில் தான்
படிக்கிறார்கள். அவர்கள் பள்ளியில் ஆங்கிலம் படிப்பார்கள், ஆனால் ஆங்கிலத்தில் பேச
பயப்படுவார்கள். ஏற்கனவே சொன்னதுபோல நான் ஆங்கிலத்தை மலையாள வழி பள்ளியில் தான்
படித்தேன். அந்த பள்ளியில் படித்துதான் நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.
நான் ஆங்கிலத்தில்
புலமை பெற்றவன் அல்ல, அத்துடன் ஆங்கிலத்தில் புலமை இருப்பவர்களுக்கு
சொல்லிக்கொடுக்கவும் விரும்பவில்லை. தங்கள் தாய்ம்ழியில், அல்லது வட்டார மொழியில்
10 அல்லது 12ம் வகுப்புவரை படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேச பயப்படும் அல்லது
ஆங்கிலத்தை புரிந்து கொள்ளவே ‘பய’ப்படும் நண்பர்களுக்கு உதவ விருபுகிறேன். அவர்கள்
ஆங்கிலத்தில் பேச, குறைந்த பட்சம் ஆங்கிலத்தை புரிந்துகொள்ள உதவி செய்ய
ஆசைப்படுகிறேன்.
அதற்காக ஒரு எளிய
முறையை பின்பற்றுகிறேன். அவர்களுக்கு உதவ நான் கதை சொளுதளையும் பாடம்
நடத்துவதையும் பயன்படுத்த விரும்புகிறேன். மலையாளம் மற்றும் தமிழ் மொழியிலிருந்து
நிறைய வார்த்தைகளை அதில் பயன்படுத்துகிறேன். இலக்கணம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையை மட்டுமே கவனத்தில் கொள்ளுகிறேன்.
கதை சொல்லுதல் வழியாக
ஆங்கில கற்றுக்கொள்ள உதவுவது ஒரு புதிய முறை தான். அவர்களுக்கு இது பொருத்தமாக
இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முறையில் ஒன்றோ இரண்டோ கதைகளை பின்பற்றி
வந்தாலே அவர்களால் ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ எனும் பொன்மொழிக்கேற்ப தமிழைக்கூட
கற்றுக்கொள்ள தொடர்ந்து பயிற்சி எடுக்கவேண்டும். அதனால் தொடர்ந்து இக்கதைகளை
படித்து வாருங்கள்.
ஒரு நாள் இது
உங்களுக்கு போதாது என தோன்றும். அதுதான் இரண்டாம் கட்டம், அந்த கட்டத்தில் நீங்கள்
புத்தகங்களை அல்லது முறையான வகுப்புகள் நோக்கி செல்லலாம். இது போதாது என்று அந்த
இரண்டாம் நிலையை நோக்கி நீங்கள் செல்ல விரும்பினால், ஒரு நண்பராவது அப்படி
விரும்பினால், அதுதான் இந்த முயற்சியின் வெற்றி!
இந்த வடிவத்தைப்
பற்றிய உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் கமன்ட் பண்ணுங்கள். ஏதாவது
வார்த்தை அல்லது வாக்கியம் ஔரிந்துகொள்ள கஷ்டமாக தோன்றினால், அதை நான் அடுத்த
பதிவுகளில் நான் மாற்றிவிடுகிறேன். ஒரு வேலை உங்கள் கருத்துக்களுக்கு அங்கேயே
பதில் சொல்ல முடியவில்லை என்றாலும் அவை அடுத்த பதிவுகளில் காணமுடியும்.
நண்பர்களே, இதை
உங்கள் நண்பர்களிடமும், குறிப்பாக சிறுவர்களிடமும், அவர்கள் ஆண்கள வழியில்
படித்துவந்தாலும், அவர்களிடம் பரிந்துரைக்க வேண்டுகிறேன். வகுப்பறைக்கு வெளியே அவர்களுக்கு
ஆங்கிலத்தை கேட்பதற்கோ பேசுவதற்கோ வாய்ப்பு இல்லாததால் நிறைய பேரால் ஆங்கிலம் பேச
முடிவதில்லை. அதனால். இந்த தளமும் கதைகளும் அவர்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கும். அத்துடன் ஆங்கிலம் அக்ற்றுக்கொள்ள ஆசைப்படும் அணைத்து நண்பர்களுக்கும்
இது பயனுள்ளதாக இருக்கும்.
தயவுசெய்து இந்த
சானலை லைக், கமன்ட், ஷேர், சப்ஸ்க்ரைப் செய்யவும். இந்த தளத்தை பாலோ செய்யவும்.
வீடியோக்களின் உள்ளடக்கம் இங்கே எழுது வடிவில் வருவதனால் வீடியோக்களை பார்ப்பதற்கு
முன்போ பின்போ இதை ஒரு குறிப்பாக பார்க்கலாம். இது உங்களுக்கு மொழியை கற்க உதவியாக
இருக்கும். இதுதான் நண்பர்களுக்கு நான் உதவும் முறை.
நான் பாடமா நடத்த
அல்ல, ஆங்கிலம் கற்க உதவிதான் செய்கிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை நான்
உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நன்றி.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post