Sunday, 19 July 2020

பேச்சும் எழுத்தும்






எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதில் எழுதுவதும் பேசுவதும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஒருவர் நேரடியாக அல்லது இதுபோல வீடியோ வழியாக பேசும்பொழுது, கேட்பவர்களுக்கு அல்லது பார்ப்பவர்களுக்கு பேசுபவரின் முகத்தை பார்க்க முடியும். அவருடைய குரலை கேட்க முடியும். அதனால் அவருடைய முக பாவனைகளை, உடல் மொழியை, அதற்கேற்ப வரும் குறல் மாற்றங்களை பார்க்க முடியும். பேச்சின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள முடியும். பேசுபவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்.
வார்த்தைகள் அல்லது வாக்கியங்களில் தவறு ஏற்ப்பட்டாலும், இலக்கணப் பிழை ஏற்ப்பட்டாலும் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் எழுத்தில். எழுதுபவரும் வாசிப்பவரும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் எனபது இல்லை. ஒரே நேதிலும் இருக்க வேண்டியதில்லை. வாசகனால் எழுதியவரின் பாவனைகளையோ உடல்மொழியையோ பார்க்க முடியாது. அதனால் அந்த விஷயங்களை குறிப்பிட்டு சொல்லும் விவரணைகள இல்லாமல் வாசகனால் முழுமையாக் புரிய வாய்ப்பில்லை. அதனால் உள்ளடக்கத்தை வாசகனுக்கு கடத்த தேவையான விவரணைகள் அங்கே இருக்க வேண்டும்.
பேச்சில், ஒருவர் பேசும்பொழுது வார்த்தையிலோ வாகியதிலோ ஒரு தவறு நேர்ந்தால் அங்கேயே நிறுத்தி, ‘அதுவந்து’ ‘என்ன சொல்ல வந்தேன்னா’ போன்ற வார்த்தைகளை சொல்லி உடனே திருத்திக்கொள்ள முடியும். எழுத்தில் அது முடியாது. தவறுகளை திருத்தி இறுதி வடிவம் மட்டுமே வெளியிடப்படும். அப்படித்தான் வெளியிடப்பட வேண்டும். அதுதான் நல்ல எழுத்து.
பேசுவதைப் போலவே எழுத விரும்பினால் அதை ரசிக்க முடியாது. எழுதுவதைப் போலவே பேசினால் அதுவும் ஏதோபோல் இருக்கும். இரண்டும் அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வித்தியசமாகவே இருக்கும்.
இங்கே நானும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறேன். நான் இங்கு பேசும்பொழுது சாதாரணமாக பேசுகிறேன், எளிய மொழியையே பயன்படுத்துகிறேன். வார்த்தைகளில். வாக்கியங்களில். இலக்கணத்தில் சில தவறுகள் வந்தால் அதை உடனடியாக திருத்த முயற்சிக்கிறேன். முடியவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவேன். ஆனால் இங்கே அவை எழுத்தாக வரும்பொழுது கொஞ்சம் இலக்கணம் பார்த்துதான் ஆகவேண்டும். தவறுகளை திருத்தவும் மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்க்கவும் வேண்டி இருக்கிறது. அதனால் பேச்சுக்கும் எழுத்திற்கும் சில விஷயங்களில் மாறுபாடுகள் இருக்கும்.
வீடியோக்களை பார்க்கும்பொழுதும் இங்கே வாசிக்கும்பொழுதும் அதை  நினைவில் வைத்துக்கொள்ளுமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுதுதான் கருத்துக்களை புரிந்து கொள்வதற்கும் மொழியை கற்பதற்கும் வசதியாக இருக்கும். 
தயவுசெய்து இந்த சானலை லைக், கமன்ட், ஷேர், சப்ஸ்க்ரைப் செய்யவும். இந்த தளத்தை பாலோ செய்யவும். தற்பொழுது நாம் கதைகள். பாடங்கள் மற்றும் சிறப்பு வீடியோக்களுக்கு செல்லலாம்..

No comments:

Post a Comment

Let others know your opinions about this post