நண்பர்களே,
கடந்த இரண்டடரை வருடங்களாக, நான் இந்த தளத்தில் பல சிறிய வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறேன். அத்துடன் அதன் வடிவத்தையும்
உள்ளடக்கத்தையும் சில முறை மாற்றியுள்ளேன். அவற்றின் தரத்தை உயர்த்துவதற்காக
மட்டுமே அப்படி செய்து வந்தேன்.
ஏனென்றால் ஒரு படைப்பாளியாக என்னால் அதில்
திருப்திப்பட முடியவில்லை. என்னால் முடிந்தவரை அதை முழுமையாக திருத்த விரும்பினேன்.
அதற்காக பல நண்பர்களுடைய அறிவுரைகளையும் அபிபிராயங்களையும் கேட்டேன். உண்மையில்
ஒரு சில வீடியோக்களை மட்டுமே நண்பர்களிடம் பகிர்ந்தேன். மற்ற அனைத்தையும் வெறுமெனே
பதிவேற்றி நானே பார்த்து, பரிசோதனை செய்து, தரத்தை உயர்த்த முயற்சித்தேன்.
என்னுடைய விடியோக்களின்
வடிவம் மற்றும் உள்ளடக்கம் பற்றி பல நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும்
அறிவுரைகளையும் சொன்னார்கள். என்னுடைய பார்வை, இடம் வலம் பார்ப்பது பற்றி, தாடையை
உயர்த்துவது தாழ்த்துவது பற்றி, குரல் மாற்றம் பற்றி என அணைத்து விஷயங்களிலும்
அறிவுரை சொன்னார்கள்.
அந்த நண்பர்கள்
அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர்களுடைய அபிபிராயங்களையும்
அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு உள்ளடக்கத்தை சிறிது மாற்றி மீண்டும் புதியதாக
விடியோக்களை பதிவிட நினைத்தேன். பிறகு அது போதாது என்று தோன்றியது. அதனால்
தற்பொழுது அணைத்து உள்ளடக்கத்தையும், கதைகள் பாடங்கள் உட்பட அனைத்தையும் மாற்றி
மீண்டும் புதியதாக ஆரம்பிக்கிறேன்.
நான் முற்றிலும்
புதியதாக ஆரம்பிக்க விரும்புகிறேன். இதுவரை பதிவேற்றிய அனைத்தும் பயிற்சியாக
கருதப்படும். வரும்காலத்தில், நிறைய வீடியோக்களை பதிவேற்றிய பின்பு, இந்த பயிற்சி
வீடியோக்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். கடின உழைப்பிற்கும், தரத்தை
மெருகேற்ற எதையும் மாற்றுவதற்கு நம்பிக்கை தருவதாகவும் இருக்கும்.
நண்பர்களின்
அபிபிராயங்களும் அறிவுரைகளும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நம்பிக்கையை
தந்திருக்கிறது, தன்னம்பிக்கையை தந்திருக்கிறது. மனதில் இருந்த சில
சந்தேகங்களையும், குழப்பங்களையும் தீக்க உதவியிருக்கிறது.
இதுவரையில் நான் பல
வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறேன். ஆனால் அவற்றில் ஏதோ ஒரு குறை இருப்பதை
உணர்கிறேன். அதன் காரணம் என்னவென்று இப்பொழுது எனக்கு புரிகிறது. இதுவரை அவற்றில்
ஒரு லட்சியம் அல்லது இலக்கு இல்லை என்பதுதான் அது, தற்பொழுது இலக்கை, லட்சியத்தை
முடிவு செய்துவிட்டேன்.
இரண்டே இரண்டு
இலக்குகள்! சமூகத்தில், ஏன் நட்பு வட்டத்தில் அணித்து நண்பர்களும் ஆங்கிலம்
பேசுவதற்கு கற்றுக்கொள்ள உதவ வேண்டும், குறைந்த பட்சம் ஆங்கில பேச்சை
புரிந்துகொள்ள உதவ வேண்டும். இரண்டாவதாக, திரைத்துறையில் இருக்கும் நண்பர்கள்
அனைவரையும், திரைத்துறைக்கு வர வரும்பும் நண்பர்களா அனைவரையும் தயாரிப்பாளர்கள் ஆக
உதவ வேண்டும்.
அந்த
லட்சியங்களுக்காக என்னுடிய வீடியோகளின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் புதியதாக
மாற்றுகிறேன். இன்று முதல், ஏற்கனவே சொல்லியதை பினப்ற்றி, தினம் ஒரு கதையையும் ஓர்
பாடம் அல்லது கதை அல்லாததையும் சொல்ல விரும்புகிறேன். ஒரு வாரத்தில் ஏழு கதைகள்
மற்றும் ஏழு பாடங்கள். அனைத்தும் ஆங்கிலத்தில்! அதுதான் நம்பிக்கையுடன் புதியதாக
எடுத்த முடிவு.
அத்துடன் இந்த
வழக்காமான வீடியோக்களுடன் சிறப்பு வீடியோக்களாக, நமது ‘திரைப்பட இலக்கியச்
சங்கமம்’ அல்லது ‘ஆன்லைன் சங்கமம்’ மற்றும் ‘சந்தேகங்கள் & குறிப்புகள்’ போன்ற
தலைப்பில் பதிவேற்றப்படும்.
வழக்கமான
பதிவுகளுக்காக, ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழு கதைகளை தேர்வு செய்துள்ளேன்.
வந்தியத்தேவன், ஜெயபாரதம், கொரோனா கனவுகள், தறவாடு, கின்டர் கேம்ஸ், ஆரம்பம்
மற்றும் வைட் மேஜிக். அத்துடன் சில மாற்றங்களுடன், பாடங்கள், தனி நபர் பாடங்கள்,
குடும்பப் பாடங்கள், சமூகப் பாடங்கள், வேலைப் பாடங்கள், காதல் பாடங்கள், சினிமாப்
பாடங்கள், அவற்றுடன் ஒரு நாள் ஓபன் டயரி அல்லது சோஷியல் டயரி. இவையும்
ஆங்கிலத்தில் சொல்லப்படும்.
இவற்றின் உள்ளடக்கம்
எழுது வடிவில் நம்முடைய வலைதளத்தில் (இங்கே) ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாக
உள்ளன. இவை ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
திரைத்துறை பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள சிறப்பு விடியோக்களும் உதவியாக
இருக்கும்.
தினம் ஒரு வீடியோ
பதிவேற்றியே ஆகவேண்டும் என்று கண்டிப்பு எதுவும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு
முறை நினைவூட்டுகிறேன் எனக்கு நானே அப்படி ஒரு அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது பதிவேற்றுவேன். ஆனால் வந்தியத்தேவன்
முதல் வைட் மேஜிக் வரை மற்றும் ஓபன் டயரி முதல் சினிமாப் பாடங்கள் வரை என்ற டைம்
டேபிளை பின்பற்றுவேன். இணையாக சிறப்பு வீடியோக்களும், நேரம் கிடைத்தால் கூடுதல்
வீடியோக்கள் பதிவேற்றப்படலாம். அதற்கு எல்லையும் கிடையாது.
நண்பர்களே,
வீடியோக்களை லைக் செய்யுங்கள், உங்கள் கருத்துக்களையும் அறிவுரைகளையும் கமன்ட்
பண்ணுங்கள், உங்கள் நண்பர்களிடமும், குறிப்பாக சிறுவர்களிடம் இதை
பகிர்ந்திடுங்கள். அவர்களுக்கு இதை பரிந்துரை செய்யுங்கள். இந்த சானலை சப்ஸ்க்ரைப்
பண்ணுங்கள், இந்த வலைதளத்தை பாலோ பண்ணுங்கள்.
நன்றி.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post