Saturday, 27 July 2019

ஒரு வேண்டுகோள்..


https://www.youtube.com/watch?v=Hf_B_LAR2WY


வணக்கம்

நான் கமலபாலா பா.விஜயன். கடந்த 23 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன்.. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரு எழுத்தாளனாக, துணை இயக்குநராக, உதவி இயக்குநராக, இணை இயக்குநராக பணியாற்றி வருகிறேன்..

கடந்த 9 ஆண்டுகளாக திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்தி வருகிறேன். இதில் திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த ஆளுமைகள் பலரையும் பங்குபெறச் செய்துள்ளேன்பாராட்டு விழாக்கள், விமர்சனக்கூட்டங்கள், திரைப்பட வகுப்புகள் என பலவிதமான நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளேன்..

அதே நேரத்தில் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.. அவ்வப்பொழுது புத்தகங்களை எழுதியும் பதிப்பித்தும் வந்துள்ளேன்.. தற்பொழுது ஆமசான் கின்டிலில் என்னுடைய புத்தகங்களை வெளியிட்டு வருகிறேன்..

என்னுடைய தற்பொழுதைய இலக்கு.. சின்ன பட்ஜெட்டில் வெற்றிப்படம் எடுக்க வேண்டும், பொன்னியின் செல்வன் நாவலை மூன்று பாகங்களாக மிக பிரமாண்டமாக எடுக்க வேண்டும், திரைப்படம் மற்றும் இலக்கியத்திற்கான கிரியேட்டிவ் அன்ட் மார்க்கெட்டிங் நெட்வொர்க் ஒன்றை நிறுவவேண்டும், திரைத்துறையில் தயாரிப்பாளர் கூட்டுத்தயாரிப்பு என்பதை நிறுவவேண்டும், அத்துடன் தெரிந்த மொழிகளில் ஒரு நல்ல தயாரிப்பாளராக, எழுத்தாளாராக சாதிக்கவேண்டும் என்பதுதான்..

40வருட கனவு.. 30 வருட உழைப்பு.. 9 வருட ஆராய்ச்சி.. இவை தந்த அனுபவங்களாலும் படிப்பினைகளாலும் கண்டுபிடித்த புதிய பாதையில், மாற்றுப்பார்வை தந்த ஊக்கத்துடன், ஒரு புதிய பயணத்தை தொடருகிறேன்.. வழக்கமாக எல்லோரும் செல்லும் பாதையில் நான் செல்லவில்லை.. ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.. கண்டிப்பாக இது எனக்கு வெற்றியை தரும், மற்றவர்களுக்கு வழிகாட்டும், திரைத்துறைக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வரும்

பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க என்னால் இப்போது முடியாது என்று எனக்கே தெரியும். அதனால்தான் அதை நோக்கி செல்வதற்காகா ஒரு திட்ட பாதையை ப்ரொஜெக்ட் ரூட்டை உருவாக்கி அதன் வழி பயணித்துக்கொண்டிருகிறேன்.

பொன்னியின் செல்வனுக்கு முன்பு ஒரு பெரிய பட்ஜெட் படம், அதாவது ஹீரோ படம், அதற்கு முன்பு ஒரு மீடியம் பட்ஜெட் படம், அதற்கு முன்பு ஒரு சின்ன பட்ஜெட் படம், அதற்கு முன்பு மிகச்சிறிய பட்ஜெட்டில் ஒரு படம், இதற்கு இணையாகவே செயல்முறை சினிமா பயிலகம் என்ற நிறுவனத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்..

அப்படி படிப்படியாக வளர்ந்து அந்த பெரிய இலக்கை எட்டமுடியும் என்பது உறுதி

இந்த பணிகளை ஆரம்பிக்க, திட்டமிட்டவற்றை செயல்படுத்தி காட்ட, முதலில் என்னால் இவை எல்லாம் செய்யமுடியும் என்று எடுத்துக்காட்ட வேண்டும்.. அதற்காக மிகச்சிறிய பட்ஜெட்டில்.. உண்மையில் பட்ஜெட்டே இல்லாத ஒரு படத்தை.. எடுக்க விரும்புகிறேன். இதை டெமோ ப்ரொஜக்ட் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். அதன் முதல் கட்ட படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். அதற்கு உங்கள் உதவியை நாடுகிறேன்.

இது ஒருவிதமான க்ரவுட் பண்டிங் முறைதான். இதுவழியாக கிடைக்கும் பணம்தான் இந்த படத்தின் பட்ஜெட்.  இனி வரும் கூட்டு தயாரிப்புகளில் முதல் படி.

நடிகர்களே, எழுத்தாளர்களே, இயக்குனர்களே, தயாரிப்பாளர்களே, தொழில்நுட்ப கலைஞர்களே, மாணவர்களே, குறும்பட படைப்பாளிகளே, திரைப்பட விரும்பிகளே மற்றும் நண்பர்களே வாருங்கள்.

இந்த திட்டத்தில் இணை தயாரிப்பாளராக அல்லது புரவலர்களாக இணைந்து உதவி செய்யுங்கள்..

“இதெல்லாம் நடக்கிற காரியமா, இது எப்படி நடக்கும்” என்பது போன்ற எதிர்மறை, நெகட்டிவ் எண்ணங்கள் உள்ள நண்பர்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டாம்.. முதலில் கதை சொல் அதை கேட்டபின் இணைகிறேன் என்று சொல்லும் நண்பர்களும் தற்பொழுது இதில் இணையத் தேவையில்லை.

ஒரு கதையை சொல்லி ஒரு தயாரிப்பாளரை கன்வீன்ஸ் செய்து படம் எடுப்பது என்றால் நான் எப்பொழுதோ இயக்குநராகி படம் எடுத்திருப்பேன். அந்த வழக்கத்தை மாற்றவேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே. அதை பற்றிய கூடுதல் விபரங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.

தற்பொழுது என்னை நம்பி இந்த திட்டத்தில் இணையும் நண்பர்கள் அனைவரும் நிறுவிய இணை தயாரிப்பாளர்களாக, ‘பவுண்டர் கோ- புரொட்யூசரஸ்’ ஆக மதிக்கப்படுவார்கள்.. அவர்களுக்கான உரிய மரியாதையும் முன்னுரிமையும் இனி வரும் கூட்டுத் தயாரிப்புகளிலும் தரப்படும்.

சினிமாவை உண்மையாக அறிந்துகொள்ள ஆசைப்படும் நண்பர்கள் அல்லது சினிமாவில் ஒரு நல்ல முயற்சி  ஊக்குவிக்க விரும்பும் நண்பர்கள் இந்த திட்டத்தில் இணையுங்கள்.

இது எதுவும் வேண்டாம் என்றால் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவி செய்ய மனமுள்ள நண்பர்கள்.. நண்பர்கள் ஆகவே உதவி செய்யுங்கள்.                
      
அன்புடன்..
கமலபாலா பா.விஜயன்      




for
details..
updates..
procedures..
account number..

follow:
www.filmfriendship.com

subscribe:
youtube/Sangamam Tele Vision

No comments:

Post a Comment

Let others know your opinions about this post