Monday, 4 June 2018

#ChangefromKaalaa



ப்ளாக் டிக்கட்டில் படம் பார்க்கக் கூடாது..
தியேட்டர்களில் அளவுக்கு அதிகமாக கட்சிகள் அனுமதிக்கக் கூடாது..
அரசு அனுமதித்ததற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது..
சிறய பட்ஜெட் படங்களுக்கான காட்சிகளை குறைக்கக் கூடாது..
படம் வெளியாகும் தியேட்டர்கள், காட்சிகள், கட்டணம் போன்ற விபரங்களை பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும்..
போன்ற இலக்குகளை நோக்கி பயணத்தை 'காலா' வில் இருந்து ஆரம்பிப்போம்..

சிஸ்டத்தை சரிசெய்ய தன்னுடைய துறையான சினிமாவில் இருந்தே ஆரம்பிக்க ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்தை கேட்போம்..

தங்கள் தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க கட் அவுட்டுக்கே பாலபிஷேகம் செய்யும்/இணையத்தளத்தில் அவருக்காக வார்த்தைஜாலம்
செய்யும் ரஜினி ரசிகர்களை கேட்போம்..

தன்னை வளர்த்த திரைத்துறைக்ககான போராட்டத்தை தன்னுடைய படத்திலிருந்தே ஆரம்பிக்க சமூக போராளியான பா.ரஞ்சித்திடம் கேட்போம்..

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தன்னுடைய துறையிலிருந்தே ஆரம்பிக்க கமலஹாசனை கேட்போம்..

திரைத்துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலை கேட்போம்..

Friends, film lovers and activists..
Join and support
#ChangefromKaalaa