Tuesday, 24 October 2017

நாளைய சினிமா




அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
தற்பொழுது திரைத்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும், திரைத்துறையில் மாற்று சிந்தனைகளுக்கு வழிவகுக்க வேண்டும், திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பது போன்ற மேலும் பல எண்ணங்களுடன் நமது சங்கமம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் இந்த வருடத்தில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் நமது முயற்சிகள் பெரிய வெற்றியை தந்திருக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் அதெல்லாம் ஒரு சிறிய வட்டத்துக்குள் மட்டுமே இருந்து வருவதாக தெரிகிறது. நமது சங்கமத்தைப்பற்றி முகநூல் வழியாக பல்லாயிரக் கணக்கானோருக்கு தெரியும் என்றாலும் எல்லோராலும் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை என்பதும், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிவதில்லை என்பதும் உண்மையே! காரணம் இந்த நிகழ்வுகள் சென்னையில் மட்டும், அதுவும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே அழைப்பிதழ்கள் அனுப்பி நடத்தப்படுவதுதான்.
தற்பொழுது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரந்திர சந்திப்பு நடைபெற்று வருகிறது. என்னுடைய பட வேலைகள் நடந்து வருவதால் நமது சங்கமத்தின் உறுப்பினர்களை மட்டுமே அழைத்து, இந்த நிகழ்வை மிக எளிமையாகவே நடத்துகிறேன். வரும் ஜனவரி மாதம் சங்கமத்தின் எட்டாவது ஆண்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.




நமது சங்கமத்தின் பயன்கள் நண்பர்களிடம் பரவலாக எட்டவேண்டும் என்றால் அதன் செயல்பாடுகளைப்பற்றி, எண்ணங்களைப்பற்றி, புதிய இலக்குகள் பற்றி அனைவரும் தெரியவேண்டும். குறைந்த பட்சம் தமிழகத்தில் உள்ள பல ஊர்களிலும், திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் நண்பர்களிடம் இது சென்று சேரவேண்டும். இவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைப்பது நடைமுறையில் இயலாத காரியம். அதைவிட அவர்களை நோக்கி செல்வதுதான் நல்லவழி
அதனால் திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் அனைத்து நண்பர்களையும் சந்தித்து நாளைய சினிமாஎன்ற தலைப்பில் பேச அல்லது வகுப்பை நடத்த விரும்புகிறேன். அதற்காக நண்பர்கள், குழுக்கள், நிறுவனங்கள் என அனைவரிடமும் உதவியை கேட்கிறேன்.
(இது ஒரு திரைப்பட பயிலரங்கம் போன்றது, ஆனால் வழக்கமான பயிற்சிப்பட்டறைகளிலிருந்து வித்தியாசமானது. விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
நண்பர்கள், குழுக்கள், நிறுவனங்கள் இதற்கான ஏற்பாட்டை செய்து என்னை பேச அழைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். அல்லது உங்களுடைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வையும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புதிய இயக்கத்தில் ஒன்றிணைந்து பயணிக்க அனைத்து திரைப்பட மற்றும் இலக்கிய நண்பர்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள்.. ஒரு மாற்றத்தை கொண்டுவருவோம்!

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
மேலும் விபரங்களுக்கு: www.filmfriendship.com அல்லது facebook/Kamalabala B Vijayan

நாளைய சினிமா (CINEMA TOMORROW)

கருத்துரை/வகுப்பு: திரைப்படத் துறையில் வெற்றிபெறுவது எப்படி (பாகம் 1: திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலை)ஒரு அறிமுகம்

இலக்குகள்:
# திரைப்படம், ஊடகம் மற்றும் பதிப்பப துறைகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது..
# தொழில்முறை திரைப்பட எழுத்தாளர்களை வளர்ப்பது..
# படம் எடுப்பதற்காக கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொள்வதற்காக படம் எடுப்பது..
# கல்வி நிறுவனங்களையும் (மாணவர்கள்) திரைத்துறையையும் (படைப்பாளிகள்) இணைப்பது..
# ‘திரைக்கதை’ முதல் திரை’ வரையில் அனைத்திற்கும் வழிகாட்டுவது மற்றும் ஒருங்கிணைப்பது..
# திட்டங்களுக்காக படைப்பாளிகளையும், படைப்பாளிகளுக்காக தயாரிப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்வது..


இது ஏற்கனவே திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் திரைத்துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும் மட்டுமானதல்ல, திரைப்படத்தை விரும்பும் அனைவருக்குமானது!   

No comments:

Post a Comment

Let others know your opinions about this post