Sunday, 7 May 2017

தொடர் பயிற்சித் திட்டம்




அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும்என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது!

தற்பொழுது, திரைத்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும், திரைத்துறையில் மாற்று சிந்தனைகளுக்கு வழிவகுக்கவேண்டும், திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பது போன்ற மேலும் பல எண்ணங்களுடன் நமது சங்கமம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.   

அந்த இலக்குகளை எட்டுவதற்காக, நமது சங்கமத்தின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாக தொடர் பயிற்சித் திட்டம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! இதன்படி திரைத்துறை மற்றும் இலக்கியத்துறை சார்ந்த அனைவரும் ஒன்றுகூடுவதற்கும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், ஒவ்வொருவரும் வெற்றிபெறுவதற்கும் வழிபிறக்கும்!

இந்த திட்டத்தின்படி வாரம் ஒரு சந்திப்பு, மாதம் ஒரு விழா மற்றும் சில சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி திரைத்துறையில் புதியதாக வரும் எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நடைமுறை சினிமாபற்றிய அறிமுகம் செய்யும் சினிமா ஒரு அறிமுகம்போன்ற வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இவை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும், வெற்றியைத் தேடுபவர்களுக்கும் மிகவும் பயன்தருபவைகளாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் பல புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கவும், தொடர்புகளை வளர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். குறும்படங்கள் திரையிடுவதற்கும் அவற்றைப்பற்றி அலசுவதற்கும், அவற்றை உரிய இடங்களில் கொண்டுசேர்ப்பதற்குமான களமாக இந்த திட்டம் அமையும்.

அனைவரும் திரைப்படத்தை ரசிக்க, திரைப்படங்களைப்பற்றி அறிந்துகொள்ள, திரைப்படம் எடுப்பது எப்படி என கற்றுக்கொள்ள, அதற்கான பயிற்சியெடுக்க, வெற்றிபெற உதவியாக இருக்கும்.


இப்படி அனைவருக்கும் பலன் தரக்கூடிய இந்த திட்டத்தில் இணைந்திடுங்கள்..

 
கமலபாலா பா.விஜயன்

9446376497

No comments:

Post a Comment

Let others know your opinions about this post