Wednesday, 24 May 2017

இரட்டைமாட்டுவண்டிப்பாதை








இதுவரை வந்தவழியை திரும்பிப்பார்த்துகிடைத்த அனுபவங்களை முழுவதுமாக எடைபோட்டுப்பார்த்துதிரைத்துறையிலும் இலக்கியத்திலும் இதுவரை வருடக்கணக்கில் பணியாற்றியதை ஆராய்ந்துபார்த்து, 2011 முதல் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தியதில் கண்டுகொண்ட நண்மைதின்மைகளை எண்ணிப்பார்த்துதற்பொழுது வாழ்க்கைப்பயணத்தை முன்னோக்கி செலுத்தும்போது கண்முன்னால் தெரிவது ஒரு இரட்டைமாட்டுவண்டிப்பாதை மட்டும்தான்.
திரைப்பட இலக்கியச் சங்கமம் மற்ற அனைத்து பணிகளுக்கும் அஸ்திவாரமாக மாறியிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லைஇதுவரை அதை நான் கண்டுகொள்ள மறுத்தேன் என்பதுதான் நிஜம்சங்கமம் வேறுஎன்னுடைய திரைப்பட இலக்கிய பணிகள் வேறு என்றுதான் இதுவரை நினைத்து வந்தேன்ஆனால் காலம் அந்த எண்ணத்தை முழுமையாக மாற்றிவிட்டது.
தற்பொழுது என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் பலரும் அறிவுருத்தியபடி இந்த சங்கமத்தை தொழில்முறையாக நடத்த முடிவுசெய்தபோது தான் இந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானதுநான் எத்தனைநாள் இதை காணாமல் தாமதம் செய்திருக்கிறேன் என்று புரிகிறதுஇந்த சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கு முழுமூச்சாக பணியாற்றினால் அதுவே என்னுடைய மற்ற பணிகளுக்கும் பலன்தரும் என்பது தற்பொழுது தெரிகிறது.
அதனாலேயே இச்சங்கமத்தின் ஏழாவது ஆண்டு முயற்சியாக திரைக் கலைஞர்கள் வட்டம் ஆரம்பித்துள்ளேன். 
அதே நேரத்தில் திரைப்பட பணிகளுக்கென்றே கமலபாலா ஸ்க்ரிப்ட்ஸ் மற்றும் திரைப்படத் தோழமை தயாரிப்பு’ ஆகிய இரண்டு சேவைகள் இச்சஙகமத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனஇந்த இரண்டு சேவைகளுக்கும் ஒரே நேரத்தில் நல்லதொரு அஸ்திவாரம் அமைக்கும் விதமாக புதியதொரு கூட்டுத்தயாரிப்பு முறையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்’ கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டு பாதைகளும் வெவ்வேறானதல்லஇரண்டுமே ஒரே மாட்டுவண்டிப்பாதையின் தடங்கள்தான்இரண்டும் இணையானவைஒரே சீறாக செல்பவைசெல்லவேண்டியவை!
அதனால் என் பயணத்தை இந்த இரட்டைப்பாதையில் செலுத்த உள்ளேன்ஒரே நேரத்தில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளை நடத்திக்கொண்டுபொன்னியின் செல்வன் படத்தின் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறேன்.

திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளைப்பற்றியும்பொன்னியின் செல்வன் படப்பணிகள் பற்றியும் தொடர்ந்து அடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்..

No comments:

Post a Comment

Let others know your opinions about this post