திரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக ‘திரைப்படக் கருத்தரங்கம், திரைப்பட அறிமுகம்,
திரைப்பட ஆய்வரங்கம், குறும்பட ஆய்வரங்கம் மற்றும் திரைப்பட பயிற்சிப்பட்டறை’
போன்ற பல
தொடர் நிகழ்வுகளை நடத்த இருக்கிறது.
அதன் முதல்படியாக ‘திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி’
என்ற தலைப்பில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.
இது திரைப்படத்தையும் திரைத்துறையையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் முயற்சி!
திரைஉலகம் அறிந்ததும்,
அறிய மறந்ததும்,
அறியவேண்டியதுமான கருத்துக்களை எடுத்துரைக்கும் அரங்கம்!
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கான முதல்படி!
தொழிலாளர்களின்
திருவிழா நாளில்,
படைப்பாளிகளின்
வாழ்வில் ஒரு மாற்றுப்பார்வை!
திரைத்துறையில்
பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல,
திரைத்துறையில்
வாய்ப்பைத் தேடும் மாணவர்களுக்கும்
திரைப்படத்தை நேசிக்கும் அனைவருக்கும்!
திரைப்படத்தை நேசிக்கும் அனைவருக்கும்!
தொழிலாளர்கள்தின சிறப்பு திரைப்படக்
கருத்தரங்கம்
நாள்: 1 -5-2017 திங்கட்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,
சென்னனை
தலைப்பு: திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி (திரைப்படத்தையும் திரையுலகையும் மாறுபட்ட
கோணத்தில் பார்க்கும் முயற்சி)
அனைவரும் வாருங்கள்...
வாழ்த்துங்கள்…
No comments:
Post a Comment
Let others know your opinions about this post