https://www.youtube.com/watch?v=3ngiip7REj0
நண்பர்களே, என்னுடைய ‘படைப்புகளின் வழியே பஷீர்’ என்ற நூல் இம்முறை சென்னை
புத்தக விழாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்த நூல் புத்தகவிழாவில் 134, 135, 215,
216-ம் எண் அரங்கில் கிடைக்கும்.
இதை தொடர்ந்து, பதிப்பிப்பதற்கு தயாராக நான் எழுதி வைத்திருக்கும் நூல்கள்:
கேரளத்தில் ஒரு ஆப்பிரிக்கா
கலீல் ஜிப்ரானின் கதைகள்
பத்மராஜனின் 2 திரைக்கதைகள்
சேகுவேரா- புரட்சியின் முகம்
காரல் மார்க்சின் கவிதைகள் (திருத்தப்பட்ட மறு பதிப்பு)
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்- திரைக்கதை வடிவம்
பொன்னியின் செல்வன்- திரைக்கதை
திருக்குறள் எளியகுறள் (திருத்தப்பட்ட மறுபதிப்பு)
Thirukkural
Eliyakural
மற்றும்
மூன்று புதிய நாவல்கள்
திரைத்துறையில் பணியாற்றிவரும் நான் அந்த பணிகளிலிருந்து சற்று விடுபட்டு திருக்குறளுக்கு குறள் வடிவில் உரை எழுத ஆரம்பித்து, அதுவே இலக்கியத் துறைக்கு என்னை முழுமையாக இழுத்துவிட, ஒரே மூச்சில் இத்தனை நூல்களை (மொழிபெயர்ப்பு, தொகுப்பு மற்றும் புதுபடைப்பு) எழுதிவிட்டேன்.. தற்பொழுது திரும்பி பார்க்கையில் அதற்காக எடுத்துக்கொண்ட காலம் என்பது பல வருடங்கள்..
இவற்றில் நான்கு புத்தகங்கள் கடந்த வருட சென்னை புத்தகவிழாவிற்கு முன்பே பிழைதிருத்தம் முடிந்து பதிப்பிக்க இருந்தவை. சென்னை வெள்ளம் மற்றும் பல காரணங்களால் அவை பதிப்பிக்கப்படாமல் போயின. அவற்றில் ‘படைப்புகளின் வழியே பஷீர்’ என்ற புத்தகம் மட்டும்தான் இந்த வருடம் வெளிவந்திருக்கிறது.
மற்ற புத்தகங்கள் உரியநேரத்தில் பதிப்பிக்கப்படாமல் போனதிற்கு ‘மோடியின் தாக்குதல்’ மட்டுமல்ல, நான் மாற்று வழிகளை சிந்திக்கவில்லை என்பதும் ஒரு காரணம்தான். மீண்டும் திரைப்படம் சார்ந்த பணிகளை ஆரம்பித்ததும், தொடர்ந்து ‘திரைப்பட இலக்கியச் சங்கமம்’ நடத்துவதற்காக நேரத்தை செலவிட்டு வந்ததும் கூட காரணங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
தற்பொழுது திரைத்துறையில் கவனம் செலுத்தியபடியே ஒரு எழுத்தாளனாக, அடுத்தகட்டமாக, நான் செய்யவேண்டிய பணிகளைப்பற்றி யோசிக்கும் பொழுது பல சிந்தனைகளும் கேள்விகளும் மனதிற்குள் எழுகின்றன. அவற்றிற்கு விடை இந்த வருடம் வெளிவந்திருக்கும் என்னுடைய ‘படைப்புகளின் வழியே பஷீர்’ என்ற நூலுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் ஆதரவில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அதனால் நண்பர்களே, இந்த நூலை படித்து உங்கள் கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் சொல்லுங்கள்.. முடிந்தவரை இந்த நூலை வாங்கி ஆதரவு தாருங்கள்.. (அதுதான் இந்நூலின் பதிப்பகத்தாருக்கும் ஆதரவாக இருக்கும்.) ஒரு எழுத்தாளனாக நான் அடுத்து செய்யவேண்டிய பணிகளை, அவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதை, உங்கள் ஆதரவும் மதிப்பீடுகளும் எனக்கு உணர்த்திவிடும்..
(மறக்க
வேண்டாம், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்த நூல் புத்தகவிழாவில் 134, 135, 215,
216-ம் எண் அரங்கில் கிடைக்கும். இன்றுமுதல் மாலை நேரத்தில் நானும் புத்தக
விழாவில் இருப்பேன். நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்…)