Monday, 24 October 2016

திருக்குறள் விண்ணப்பம்



திருக்குறளை நேசிக்கும் திருவாளர்களே
திரைப்படத்தையும் இலக்கியத்தையும் நேசிக்கும் நண்பர்களே..

நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே எளியகுறள்என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தேன்.
பதிப்புத்தொழில் பற்றி தெரியாமலேயே அன்று வெளியிட்டதால் அதை சரயாக  விளம்பரம் செய்யாமலும் வியாபாரம் செய்யாமலும் அப்படியே விட்டுவிட்டேன்.
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் ஒருமுறை குறிப்பிட்டதுபோல மனைவியின் தாலியை அடகுவைத்து புத்தகம் போட்டால் அதை அனைவருக்கும் இலவசமாக கொடுக்கவேண்டிய கட்டாயத்தில்தான் நானும் இருந்தேன். இதில் கவிதை புத்தகத்திற்கும் திருக்குறள் உரைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பிறகுதான் நான் புரிந்துகொண்டேன். (இதில் நான் எழுதிய உரையும் ஒரு விதத்தில் கவிதைகள்தான்!)
இன்று திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வளர்ச்சிக்காக திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலைஎன்று புத்தகத்தை வெளியிட முடிவுசெய்தபின்தான் தற்பொழுது இந்த எளியகுறள்பற்றி நினைவுக்கு வந்தது.
காரணம் அடுத்த புத்தகத்தை அச்சிடுவதற்கும், சங்கமத்தின் சார்பில் கூட்டங்களை நடத்துவதற்கும் பணம் தேவை. அதற்கு என்னிடம் உள்ள ஒரே வழி இந்த எளியகுறள்தான்.
இந்த நூலை அச்சிட்ட விலைக்கே தற்பொழுது விற்க முடிவுசெய்துள்ளேன். தட்டச்சு செய்வதற்கும், வடிவமைத்ததற்கும், அச்சிடுவதற்கும் செலவு செய்த பணம் கிடைத்தால் போதும். அதைவைத்துக்கொண்டு அடுத்த புத்தகத்தை பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அதனால் 160 ரூபாய் விலைகொண்ட இந்த நூலை குறைந்த பட்சம் 50 ரூபாய்க்கு வாங்கி உதவிசெய்ய வேண்டுகிறேன். (அதற்கு மேல் தந்தால் அவர்கள் இச்சங்கமத்தின் புரவலர்கள்தான்!)
இதையே வேறுவிதமாக சொன்னால், திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்காகவும் திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலைஎன்ற புத்தகத்தை பதிப்பிப்பதற்காகவும் இச்சங்கமத்தின் புரவலர்களாக உதவிசெய்யுங்கள். அப்படி உதவி செய்யும் அனைவருக்கும் எளியகுறள்என்ற புத்தகத்தை நன்கொடை ரசீதாகதருகிறேன்.

எப்படி நினைத்தாலும் பரவாயில்லை, நண்பர்களே இந்த புத்தகத்தை வாங்கி உதவுங்கள். (உங்களுக்காகவும் வாங்கலாம், மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கவும் வாங்கலாம்)

No comments:

Post a Comment

Let others know your opinions about this post