Friday, 13 May 2016

சார்லி சாப்ளின்


2-1-16

மேதினத்தையொட்டி நேற்று ஒரு திரையிடலும் அதைத் தொடர்ந்து ஒரு சந்திப்பும் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு சில நண்பர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். சார்லி சாப்ளின் நடித்தமாடர்ன் டைம்ஸ்திரையிட்டதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி!
உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை கொண்டாடும் இந்த நாளில் பேசுவதற்கு பொருத்தமான படம்தான் என்று நான் நம்புகிறேன்.  
சாதாரணமாக சார்லி சாப்ளின் படங்களை நகைச்சுவைப் படங்களாகத்தான் பார்க்கின்றனர். அதனால்தான் அந்த படங்கள் உலகம் முழுவதும் சிறுவர்களின் படங்களாக மதிக்கப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் அவை சிறுவர்களின் படங்கள் மட்டும்தானா?
தன்னுடைய மரணத்திற்கு பிறகும் உலகின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தான். அவருடைய படங்கள் ஸ்லாட்பஸ்டிக் காமடி நிறைந்த படங்கள் தான், அவர் நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு திறமையான நடிகர்தான். ஆனால், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் மிகவும் சீரியஸான ஆள்தான். அவர் தன்னுடைய படைப்புகளில் சாதாரண மக்களின் வருத்தம், வலி, இயலாமை போன்றவையைத்தான் சொல்லியிருந்தார். இவற்றை அழுத்தமாக சொல்வதற்கும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கும் அவர் பயன்படுத்தியது நகைச்சுவை பாதையைத்தான்!
உண்மையில் அவர் காமடியை படைத்தார், ஆனால் அவர் ஒரு காமடியன் கிடையாது!
ஒரு தனித்துவமான பாணியில் அனைத்தையும் சொல்வதற்கு அவர் தன் உடலை பயன்படுத்தினார். அது அவரை தனிப்பிறவியாக மாற்றியது. அந்த தோற்றம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் வரவேற்பை பெற்றது. ஒரு காலத்து குழந்தைகள் வளர்ந்து பின்வரும் வருடங்களில் பெரியவர்களாக மாறுவார்கள். குழந்தைப்பருவத்தில் இருந்தது போலவே அவர்கள் தொடர்ந்து சாப்ளினை போற்றி வருகின்றனர். அப்படி சார்லி சாப்ளின் எந்த காலத்திலும் மக்களால் விரும்பப்டுபவர் ஆகிறார்.
திரைத்துறையில் சார்லி சாப்ளின், ப்ரூஸ்லீ, ஜாக்கி சான் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவர்களுடைய எந்த படத்தின் எந்த ஒரு பகுதியை எடுத்தாலும், அது ஒரு நிமிடமே ஆனாலும் சரி, அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற அதே உணர்வுகளுடன் ரசிக்க முடியும்.
மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முன்வந்ததால் அவர்களில் சார்லி சாப்ளின் வித்தியாசமாக காணப்படுகிறார். அவருடைய படங்கள் நடுத்தரம் மற்றும் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கின்றன. அவருடைய காலத்தில அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்பட்டார். ஆனால், ஒரு படைப்பாளி என்ற முறையில் தன்னுடைய படைப்புகளை அவர் ஒரே அரசியல் பார்வையில் அடக்கிவிடவில்லை.
அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்த பார்வையில் இருந்த தவறுகளையும் விமர்சித்தார். இந்தமாடர்ன் டைம்ஸ்அதற்கு நல்ல உதாராணமாக சொல்ல்லாம். வழக்கம் போலவே, அவர் இதிலும் ஏழைகளின் பிரச்சினைகளையும் வலிகளையும் வெளிக்காட்டுகிறார். கூடவே பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றை ஒரே போல கிண்டல் செய்கிறார்.
சார்லி சாப்ளினின் இன்னொரு தனித்துவம் என்பது அவருடைய நேர்மறை எண்ணம் தான். அவர் தன்னுடைய படங்களில் ஏழைகளின் தோல்விகளையும் நஷ்டங்களையும் சொன்னாலும், அவருடைய எந்த ஒரு படமும் எதிர்தமறையான எண்ணத்துடன் முடிவடைந்ததில்லை. அவர் தன்னுடைய படங்களை வருங்காலத்தைப்பற்றிய ஒரு நேர்மறை கனவுடன் தான் வழக்கமாக முடித்து வைப்பார்.
ஒவ்வொரு காட்சியிலும் அவர் உடல் மொழியும் அசைவுகளும் நேர்மறை எண்ணங்களை தூண்டிவிடும். சர்க்கஸ் கூடாரத்தில் கொடூர மிருகங்களுடன் விளையாடுவதும் (சிட்டி லைட்ஸ்), ஹோட்டலில் பாட்டு பாடுவதும் (மாடர்ன் டைம்ஸ்) அவருடைய இந்த குணத்திற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த குணம் அவருடைய உடலில் பிறவியிலேயே இருக்கிறதென்றே நான் நினைக்கிறேன்.
திரையுலக சரித்திரத்தில் அவருடைய காட்சிகளையும் அல்லது அவருடைய படங்களை முழுவதுமாகவும் பலரும் பல முறை காப்பியடித்திருக்கின்றனர். நமது நாட்டிலும், சாப்ளின் படங்களை பின்பற்றி பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.
அவருடைய படங்களுடன் ஒப்பிட வேண்டியிருக்கும் என்பதால் உண்மையில் அவருடைய படங்களை நகலெடுப்பதும், அவற்றை வெற்றிபெறச்செய்வதும் புதுப்படைப்பாளிகளுக்கு மிகப்பெரும் சவால்தான்

மேதினத்தில் சார்லி சாப்ளினை நினைத்துப்பார்ப்பதே அவருக்குச் செய்யும் மரியாதைதான்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post