(5-5- 16)
தமிழ்நாட்டில் வாழ்வதற்காக வெளியிலிருந்து வந்தவர்கள் கூட இளையராஜாவின் இசை இல்லாமல் இங்கு வாழ்வது கடினம். கடந்த நாற்பதாண்டு காலமாக அவருடைய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு! இளையராஜாவை விரும்பாதவர்களும், திரைப்படங்களையே விரும்பாதவர்களும்கூட இளையராஜாவின் இசையை ரசிப்பார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால், இன்று என் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது. தான் ஒரு நல்ல இசையமைப்பாளர் இல்லை என்று இளையராஜாவே சொல்லியிருக்கிறார். அவர் அதை மறைமுகமாக சொன்னாலும், அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?
இந்தியாவின் ஜனாதிபதியிடம் இருந்து மேடை ஏறி, 2015ல் வந்த திரைப்படங்களில் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வாங்க இளையாராஜா மறுத்திருக்கிறார். காரணம், சிறந்த பாடல்களுக்கான இசை, சிறந்த பின்னணி இசை என இசையை பிரிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.
விருதுக்குழு அவருடைய பணியை முழுமையாக கணக்கிடவில்லை அல்டலது அவருடைய திறமையை முழுமையாக மதிக்கவில்லை என்று அவர் வருத்தப்படுகிறார். சிறந்த பாடல் இசைக்கான விருதை இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு, பின்னணி இசைக்கான விருதை அவருக்கு கொடுப்பது தவறு என அவர் நினைக்கிறார். சிறந்த பாடல் இசைக்கான விருதை தராதிருப்பது அவரை மட்டம் தட்டுவதற்கான ஒரு முயற்சியாக அவர் பார்க்கிறார்.
இந்த இருவகை இசையிலும் அதாவது பாடல் இசையிலும் பின்னணி இசையிலும் இளையராஜா மிகச்சிறந்தவர் என்பதில் கடந்த நாற்பது வருடங்களில் யாருக்கும் சந்தேகம் இருந்த்தில்லை.
ஆனால், இந்த விருதுகள் தனி மனிதருக்கானது அல்ல. அந்த விருதுகள் தனி மனிதினின் திறமையின் அடிப்படையில் கொடுப்பது அல்ல. அந்தந்த வருடத்தில் வெளிவந்த படைப்புகளில் இருந்த தேர்ந்தெடுத்த சிறந்த படைப்புக்காகத்தான் கொடுக்கப்படுகின்றன. ஆகையினால், விருது கொடுப்பது அந்த படைப்பாளியினை மதிப்பிடுவது ஆகாது.
மற்றவர்களை ஒப்பிடும்போது, தேர்ந்தெடுத்த படைப்பு என்பது அந்த வருடத்தில் வெளிவந்த படைப்புகளில் சிறந்ததாக இருக்கலாம். அதற்காக மற்ற படைப்புகள் அனைத்தும் கெட்ட படைப்புகள் என்றோ தகுதியில்லாத படைப்புகள் என்றோ ஆகிவிடாது.
கடந்த நாற்பது வருடங்களில் இளையராஜா நான்கு முறை தான் இந்த விருதை பெற்றுள்ளார். அவருடைய கருத்து சரியாக இருந்தால், மிச்சமாக 36 வருடங்களிலும் அவர் ஒரு கெட்ட இசையமைப்பாளராக இருந்தார் என்றே சொல்லவேண்டும்! இந்த காலம் முழுவதும் அவருடைய படைப்புகளை நாம் ஒரு பொக்கிஷமாக நினைத்தாலும்!
இன்றைய உலகில் அதிக மக்களால் விரும்பப்படும் இசைகளின் பட்டியலில் இளையாராஜாவின் பாடல்கள்தான் முதல் இடத்தில் இருக்கும். சுருக்கமாக சொன்னால், ஒரு விஷயம் உண்மை! அவருடைய இசை காலத்தை வென்றது, ஆனால் தனிமனிதனாக அவர் ஒரு கெட்ட இசையமைப்பாளர்தான்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post