உருவம் கண்டு மலரும்
உறவு கொண்டு வளரும்
நிர்பந்தத்தால் தொடரும்
உடலால் உயிர்பெறும்
உணர்ச்சிகளால் தழைத்தோங்கும்
கற்பனைகளில் களவாடும்
கனவுகளில் கரையேறும்
பழக்கத்தால் பயணப்படும்
பலவிதமான காதல்கள்
தந்தவர் எல்லோரும் காதலிகள்!
இவர்கள் எல்லாம் அழகிகளென்று
போட்டியை வைத்து தேர்ந்தெடுத்தால்
ஒருத்தி மட்டும் ஜெயித்திடுவாள்
என்றும் உலக அழகியென்று!
காரணம்…
அவள்தான் என்னை காதலித்தாள்
உருவம் கடந்து, உறவு கடந்து,
உடல் கடந்து, உணர்ச்சி கடந்து,
கற்பனை கடந்து, கனவுகள் கடந்து,
உயிருடன் பழகி, உயிராய் கலந்து
உருக்கமாய் காதலித்தாள்
உண்மையாய் காதலிக்கிறாள்
உள்ளவரை காதலிப்பாள்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post