காதல் உறக்கம்
வாழ்க்கையின் ஓட்டத்தை
மறக்க வைத்தது,
கோமாவில் இருந்துகொண்டே
உயிர்க்க வைத்தது,
மீண்டும் உணர்ந்த நேரத்தில்
பறக்க வைத்தது,
இழந்துபோன வருடங்களை
திருப்பித் தந்தது,
எழுதும் விரல்களில் இள
ரத்தம் பாய்ச்சியது…
உள்ளுக்குள் உறங்கிய காதல்!
தேவை
நினைத்ததை புதுமையாய்
எழுதுவதற்கு,
என்றும் இளமையாய்
வாழ்வதற்கு,
உலகம் முழுவதையும்
ரசிப்பதற்கு,
அனைத்திலும் அழகை
காண்பதற்கு,
காதலின் ஆழத்தை
உணர்வதற்கு,
காமத்திற்குப் பிறகும்
இணைவதற்கு,
உடனடி தேவை…
புதுசு புதுசாய்
சில கனவுக்கன்னிகள்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post