எப்பொழுதெல்லாம்
மனதிற்குள் ஒரு திருவிழாவைப்பற்றியோ உற்சவத்தைப்பற்றியோ நினைக்கிறோமோ, அந்த நினைப்புகளுடன்
சேர்ந்து அந்த திருவிழா அல்லது உற்சவம் சம்பந்தமான பல ஞாபகங்கள் பரவலாகவே வரத்தான்
செய்கிறது.
அரசியல், பண்பாட்டு,
அல்லது மற்ற எதை பின்பற்றிய உற்சவமோ திருவிழாவோ ஆக இருந்தாலும் இதுதான்
நிலைமை.
உலகம்
முழுவதிலும் நடக்கும் உற்சவங்களுக்கும் திருவிழாக்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் தேவையாக
இருக்கிறது.
அதுதான் மெகாபோன் என்று சொல்லப்படும் ஒலிப்பெருக்கி. (லௌட் ஸ்பீக்கர்கள் என்று அழைக்கப்படும் இவை இன்று டிஜிட்டல் ஸ்பீக்கர்களாக
வளர்ச்சிபெற்றுவிட்டன. ம்யூசிக் ப்ளேயர், மைக் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் சிஸ்டத்தையும் ஒன்றிணைத்துதான் இங்கே ஒலிபெருக்கி
என்று குறிப்பிடப்படுகிறது.) இன்றைய நாகரீக உலகில் எந்த ஒரு விழாவையும்
ஒலிபெருக்கியை தவிர்த்துவிட்டு சிந்திக்க கூட முடியாது. தலைவர்கள்
அல்லது பேச்சாளர்களின் உரை, பலவிதமாக அறிவிப்புகள் போன்றவை ஒலிபெருக்கியின்
வழியாகத்தான் அதிகமான மக்களை சென்று சேர்கிறது.
நம்
நாட்டில் இந்த பணிகளைப் பொருத்தவரையில் பாடல்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது. நமது பண்பாட்டில்,
ஒரு குழந்தையின் பிறப்பு முதல் ஒரு மனிதனின் இறுதி ஊருவலம் வரையிலான
அனைத்தையும் நாம் பாடல்களுடன்தான் கொண்டாடுகின்றனர். கடந்த காலத்தில்,
விழாக்கள் நடக்கும்போது பாடகர்கள் நேரடியாக மேடையில் நின்றுதான் பாடுவார்கள்.
இந்த பாடகர்களின் குரல் அந்த மேடைக்கு சுற்றும் உள்ள ஒரு எல்லைவரை மட்டும்தான்
சென்று சேரும். ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதால் இந்த எல்லையை
விரிவடையச்செய்கிறது.
ஒலிபெருக்கி
என்பது பரவலாகவும் மிக எளிமையாகவும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் நிலை வந்த்தனால், பட்டிக்காடுகளில்
கூட ஒலிபெருக்கிகள் திருவிழாக்களில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
அந்த விழாக்களில் பாடல்கள் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் கூட ஒவ்வொருவரும்
ஒலிபெருக்கிகள் மூலமாக பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தனர். கோயில்களில்கூட ஒலிபெருக்கிகள் மூலமாக
பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தனர்.
முக்கிய
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்பு, பக்கத்து பகுதிகளில் இருப்பவர்களுக்கு அந்த
விழாபற்றி தெரிவிக்க பாடல்கள் மிகவும் தேவையாக இருக்கிறது. அதிலும்
பரவலாக திரைப்பட பாடல்கள்தான் இந்த வேளையில் ஒலிபரப்புவார்கள்.
திரைப்படப்
பாடல்களில் பல ரகம் இருக்கின்றன. திருமணம் போன்ற பொது நிகழ்வுகளிலும் இந்த பாடல்கள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல்
கூட்டங்கள் போன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் சாதாரணமாக நல்ல கருத்துக்கள்கொண்ட திரைப்படப்
பாடல்கள்தான் பயன்படுத்துவார்கள். மக்களின் வாழ்வில் இந்த சமூகப்பாடல்கள்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.
எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடல்களை சமூகப்பாடல்களுக்கு உதாரணமாக சொல்லலாம்.
சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய வேறுபல பாடல்களும் சமூகப்பாடல்களின் பட்டியலில்
இருந்தாலும், எம்.ஜி.ஆரின் பாடல்களும் கண்ணதாசனின் பாடல்களும் இவற்றில் தனித்துவமாக தெரிகின்றன.
எம்.ஜி.ஆரின் பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்ற
கவிஞர்களால் எழுதப்பட்டிருந்தாலும், அவை பரவலாக எம்.ஜி.ஆர் பாடல்களாகவே அறியப்படுகின்றன. பாடல்களுக்கு நல்ல கருத்துக்களை பரப்பவும், ரசிகர்களை
கவரவும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பயன்படுத்திய முதல் மற்றும் முதன்மையான நட்சத்திரம்
எம்.ஜி.ஆர் தான் என்பதில் ஐயமில்லை.
கண்ணதாசன் தன்னுடைய கருத்துக்களையும் அபிபிராயங்களையும் பாடல்கள் வழியாக
உணர்த்திவந்தார். ஆனால் அவருடைய சமூகப்பாடல்களில் இயலாமை,
தோல்வி, வலி மற்றும் இந்த உணர்வுகளால் எழுந்த வாழ்க்கை
தத்துவங்கள் தான் மேலோங்கி இருக்கின்றன. எம்.ஜி.ஆர். தன்னுடைய சமூக சிந்தனைகளையும்
அரசியல் பார்வையையும் தன் பாடல்களில் எடுத்துரைத்தார்.
எம்.ஜி.ஆரின் கமூகப்பாடல்கள்தான் திரை உலகிலும் அரசியல் உலகிலும் அவரை தனிப்பிறவியாக
எடுத்துக்காட்டுகிறது. அவர் தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்குகூட
இந்த பாடல்கள் பெருமளவில் உதவிசெய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அந்த
பாடல்கள்தான் அவர் மறைந்து பல வருடங்கள் ஆனபின்னும் அவரை மக்கள் மனதில் நிரந்தரமாக
வாழவைத்துக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post