திரைப்பட இலக்கியச் சங்கம்ம் கடந்த மூன்றரை
ஆண்டகளில் பதிநான்கு முறை நடத்தப்பட்டுள்ளது, தற்பொழுது 15-வது சங்கமம் வரும்
சனிக்கிழமை (2016 ஜனவரி 30) அன்று நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது,
அன்று மாலை சரியாக ஆறரை மணிக்கு
ஆரம்பித்து எட்டரை மணி வரை நடத்தப்படும்.
முன்பு குறிப்பிட்டதுபோல் ,இந்த
சங்கமத்திலிருந்து ஒவ்வொரு முறையும் அந்தந்த மாதங்களில் வெளியான படங்களில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப்பற்றி பேசவும் அதைத் தொடர்ந்து அவை பற்றி
கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படங்களின் எழுத்தாளர்கள், இயக்குனர்கள்
மற்றும் தயாரிப்பளர்களை இந்த நிகழ்வில் கவுரவிக்க இருக்கிறோம். இவர்கள்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந்த மாத நிகழ்வில் அதன்படி ‘அழகு
குட்டி செல்லம், தாரை தப்பட்டை, ரஜினி முருகன் மற்றும் கதகளி’ படங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஏன்
இந்த படங்களை மட்டும் தேர்வு செய்தோம் என்பதற்கான விளக்கம் சங்கமத்தில்
அறிவிக்கப்படும்.
நேரம் போதாதால் ஜனவரி 29 அன்று
வெளியாகும் படங்களை (சங்கமத்தை 30-ம் தேதி நடத்துவதால்) இந்த தேர்வில் சேர்க்கப்படவில்லை.
அவற்றை அடுத்த சங்கமத்தில் தான் பரிசீலிக்க முடியும்.
வழக்கம்போல நண்பர்கள் அனைவரும் வந்து
சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
இம்முயற்சியை வெற்றிபெறச்செய்ய,
ஊக்குவிக்க, வாழ்த்த வாருங்கள்
இது விவாத மேடை அல்ல, விமர்சனக்
கூட்டமும் அல்ல,
கலந்துரையாடலுக்கான களம்!
ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான
கலந்துரையாடலுக்கான களம்!
அன்புடன்
விஜயன்.பா (கமலபாலா)
No comments:
Post a Comment
Let others know your opinions about this post