Wednesday, 14 May 2014

திரை நண்பர்களுக்கு


திரைப்படத்துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்க வேண்டும், அத்துடன் திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற லட்சியத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற இந்த நிகழ்;வை நான் கடந்த இரண்டரை வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
இந்த சங்கமத்தில் சிறந்த> புகழ்பெற்ற> விருதுபெற்ற படங்களைப்பற்றியும் இலக்கியங்களைப்பற்றியும் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாக வெற்றிபெற்ற நல்ல படங்களைப்பற்றியும் இலக்;கியங்களைப்பற்றியும் விவாதிக்;கப்படுகின்றது. திரைப்படங்களின் தரம், இலக்கியம் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் தொழில்நுட்பம்> வியாபாரம்> விளம்பரம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்படுகின்றது.
பொதுவாக. சில விருந்தினர்களையும் நண்பர்களையும் தான் இந்த சங்கமத்திற்கு அழைப்பேன். திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நண்பர்களும் மற்றவர்களும் இந்த சங்கமங்களில் பங்குகொண்டனர். அதில் பலரும் திரைப்படம் மற்றும் இலககியம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்கள் தான். அதுவுமின்றி அவர்கள் திரைப்படத்துறையும் இலக்கியத்துறையும் இணையவேண்டும் நினைப்பவர்கள் தான்.
ஆனால். அந்த எண்ணத்தையும் அனைத்து புதுமுகங்கள் மத்தயிலும் இலக்கியத்துறைபற்றி அவ்வளவாக தொடர்பு வைத்துக்கொள்ளாத திரை படைப்பாளிகள் மத்தியிலும் திரைப்படம் இலக்கியத்துறைகளை நடைமுறையில் இணைக்கவேண்டியதின் அவசியத்தையும் பரப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நல்ல மற்றும் வெற்றிப்படங்களில் இலககியத்திற்கு உள்ள தாக்கத்தை அவர்களுக்கு சொல்லி புரியவைக்கவேண்டும். அதற்காக அவர்கள் அனைவரையும் இந்த சங்கமத்தில் இணைக்க ஆசைப்படுகிறேன்.     
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் கருத்துக்களையும் நோக்கத்தையும் பெரிய வட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். அதற்கு அனைவரையும் இந்த சங்கமத்திற்கு அழைப்பது என்பது போதாது. நான் நடத்தும் சங்கமத்திற்கு அவர்களை அழைப்பதை விட புதுமுகங்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம் சென்று இந்த எண்ணங்களை பங்குவைப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். இதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.
ஏதாவது நண்பர்கள் குழு> திரைப்பட மன்றம்> திரைப்பட கல்லூரி> அல்லது ஒரு அமைப்பு திரைப்படத் தயாரிப்பு> திரைப்பட வியாபாரம் போன்று திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமான எந்த ஒரு தலைப்பிலும் கலந்துரையாடல்> கூட்டம் அலலது விவாதம் நடத்துவதாக இருந்தால்> அதில் திரைப்பட இலக்கியச் சங்கமம் சார்பில் பங்கு பெறுவதில் நான் சந்தோஷமாக உள்ளேன்.

அதனால் தயவுசெய்து திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நிகழ்வை நடத்துங்கள் அதற்கு என்னை அழையுங்கள்.      

No comments:

Post a Comment

Let others know your opinions about this post