1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர்
ஜுல்ஸ் மாரே (துரடநள ஆயசநல) என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி
ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக உருமாற்றத் திட்டமிட்டார்.
அதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள
குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் (தகடு) இயங்கும் ஒளிபுகாத இருட்டறையாக அமைத்தார்.
படம் பதியும் தகட்டுச்சுருள், பல்சக்கரங்கள் உதவியுடன் ஒரு வினாடியில் பலமுறை நகர்வதற்கான ஒரு பொறியையும்
உள்ளே அமைத்தார். அதைத் துப்பாக்கியின் குதிரைப்பகுதியின் விசையில் இணைத்தார். குதிரையை
விரலால் இழுத்தால், தகட்டுச் சுருள்
அடுத்தடுத்து நகர்ந்து, வாpசையாகப் படம் பதியுமாறு உருவாக்கினார்.
இந்தக்கேமராவால் வினாடிக்குப் பதினாறு படங்கள் பிடிக்க
முடியவில்லை. வெறும் 12 படங்கள் மட்டும்
பதிவாகக்கூடிய வேகத்திலேயே அது இருந்தது. எனினும், திரைப்படக் கேமரா கண்டுபிடிப்பில் இது
ஒரு மைல்கல் என்று கூறலாம். இதனை வைத்து டாக்டர் மாரே 1889இல் பாhPஸ் நகர விழாவில் மக்களைத் தம் துப்பாக்கிக்
கேமராவால் படம்பிடித்து, அந்தப்படத்தை மக்கள்
முன் போட்டுக்காட்டினார். அது இயல்பான சலனமாக இருக்கவில்லை. தரம் குறைந்த படப்பிடிப்பு
என்றாலும் அதுதான் உலகின் முதல் படப்பிடிப்பு. ‘ஷுட்டிங்-கன்’ என்ற வேட்டைத் துப்பாக்கியைக் கேமராவாக உருவாக்கிப் படம் பிடித்ததை நினைவு
கூர்வதாகத்தான் இன்றைக்கும் சினிமாப் படபிடிப்பை ‘ஷுட்டிங்’ என்று அழைக்கிறோம்.
டாக்டர் ஜுல்ஸ் மாரேயின் உதவியாளராக இருந்த ஜர்ஜெஸ்
டெமனி என்பவர், அந்த வேட்டைத் துப்பாக்கிக்
கேமராவில் பல முன்னேற்றங்களைச் செய்து வடிவமைத்தார். அப்படியும் வினாடிக்கு 12 படங்களுக்கு மேல் படம் எடுக்க முடியவில்லை.
அவர் அதனை காமண்ட் என்பவாpடம் 1893இல் ஒப்படைத்தார்.
இதே காலத்தில் அமொpக்க நியு+யார்க் நகாpல் ஒளி விளக்கு, ஒளிப்படம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி
வந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் தம் உதவியாளரான கே.எல்.டிக்ஸனுடன் சேர்ந்து சலனப்படக்
கேமராவைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றார். எட்வர்டு மைபிhpட்ஜின் சாதனைகளும், டாக்டர் மாரே கண்டுபிடித்த வேட்டைத் துப்பாக்கிக்
கேமராவும் அவருள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. டாக்டர் மாரேயின் கேமராவால்
ஒரு வினாடிக்கு 12 படங்கள் பிடிப்பதே
சிரமமாக இருந்தது. சலனப்படம் இயல்பானதாகத் தோன்ற வேண்டுமானால் ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதிவது முக்கியம் என்பதை தாமஸ்
ஆல்வா எடிசன் உணர்ந்திருந்தார்.
அந்தக் கேமராவுடன், படம்பிடித்த படச்சுருளைப் போட்டுக்காட்டப்
‘புரஜெக்டர்’ என்ற படங்காட்டிக் கருவியையும் கண்டுபிடிக்க
வேண்டும் என்று திட்டமிட்டு முயன்றார். எடிசனும் டிக்ஸனும் எடுத்த முயற்சியில் தோல்வியையே
சந்தித்தனர். ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதியும் கேமராவை உருவாக்குவது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே
இருந்தது. இருந்தாலும் எடிசன் தன் முயற்சியில் பின்வாங்கிவிடவில்லை.
இந்த காலகட்டத்தில்தான், அதாவது 1888-1889 ஆண்டுகளில், ஜார்ஜ் ஈஸ்ட்மென் மற்றும் டாக்டர் ஹன்னி
பால்குட்வின் இருவரும் சேர்ந்து செல்லுலாய்டு பிலிம் சுருளைக் கண்டுபிடித்து விற்பனைக்கு
விட்டனர். அந்தப்படச்சுருள் இப்போதுள்ள மாதிhpயில்லை. பிலிமின் அகலம் நமது சுட்டு விரல்
நீளத்திற்கு இருந்தது.
எடிசன் அந்த செல்லுலாய்டு படச்சுருள்களை வாங்கி ஆராய்ந்தார்.
அதில் படங்களைப் பதிவுசெய்வது எளிமையாகவும் துல்லியமாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.
அந்தப் படச்சுருளுக்கு ஏற்பக் கேமராவைத் திருத்தி வடிவமைத்தார். வினாடிக்கு 16 படம் பிடிக்கும் கேமரா தயாரானது.
1891ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் நாள் அந்தக் கேமராவின் உhpமைக்கு எடிசன் விண்ணப்பித்து,
31-08-1891இல் அவர் பெயரில்
கேமரா உரிமை பதிவானது.
தாமஸ் ஆல்வா எடிசன் தம் கேமராவில் பெண்களின் நடனத்தை
பதிவு செய்தார். ஒரு சர்க்கஸ் கம்பெனியின் அனுமதியோடு, அந்தக் கம்பெனியின் சர்க்கஸ் வித்தைகளைப்
படம்பிடித்தார். அன்றைக்குப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரராக இருந்த ஜேம்ஸ் கே.கார்பெட்
என்பவரை இன்னொருவரோடு சண்டையிடச் செய்து அந்தக் குத்துச் சண்டைப் பந்தயத்தையும் படம்பிடித்தார்.
இவ்வாறு மக்கள் விரும்பிப் பார்க்கும் சுவையான நகர்வுக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டார்.
ஆனால், அந்தப்படங்களை பொதுமக்கள்முன்
திரையில் போட்டுக்காட்டும் புரஜெக்டரை அவரால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெட்டிக்குள்
படச்சுருளை ஓடவிட்டு, ஒரு லென்ஸ் வழியாக
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். ‘கினிட்டோஸ்கோப்’ என்று அதற்குப் பெயரிட்டார்.
‘கினிமா’என்ற கிரேக்க மொழிச் சொல்லுக்கு அசைவு, நகர்வு, சலனம் என்பது பொருளாகும். கினிமாதான்
ஆங்கிலத்தில் ‘சினிமா’ ஆனது. தாமஸ் ஆல்வா எடிசன் ‘கினிமா’ என்ற கிரேக்கச் சொல்லை அடிச்சொல்லாக வைத்துக்
‘கினிட்டாஸ்கோப்’ என்று இதற்குப் பெயர் சூட்டினார்.
இதே காலகட்டத்தில் அமொpக்க ஐக்கிய அரசாங்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளராகப்
பணியாற்றி வந்த சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ் (ஊ.குசயnஉளை துநமெiளெ) என்பவா; சலனப்படத்தின் மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், பெரிதும்
முயன்று வினாடிக்கு 16 படம் பிடிக்கும்
கேமராவையும், படங்காட்டும் கருவியான
புரஜெக்டரையும் கண்டுபிடித்தார்.
அந்த காலத்தில் உலகின் பலநாடுகளில், செல்லுலாய்டு பிலிமில் பதிந்த ஒளிப்படத்தை
‘மாஜிக் லேண்டர்ன்’ எனப்படும் விளக்கின் மிகு ஒளியில் திரையில்
அசையாத படங்களைக் காட்டிப் பொழுது போக்கி வந்தனர். அதில் வட்டவடிவ அளவில் படம் தொpயும். அதே மாஜிக் லேண்டர்ன் விளக்கைப்
பயன்படுத்தி ஜென்கின்ஸ் திரையில் சலனப்படத்தைக் காட்ட முயன்றார்.
இதே சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ்தான் பிற்காலத்தில், அதாவது 1925இல், அமெரிக்காவில் வீடியோவைக் கண்டுபிடித்தவர்.
இவர் 1894இல், தமது வீட்டில் ஒரு திரைப்படம் காட்டப்போவதாக
தன் நெருங்கிய நண்பர்களை அழைத்தார். நண்பர்கள் அனைவரும் அவரது வீட்டில் கூடினர். ஹாலின்
ஓரத்தில் ஒரு வௌ;ளைத்திரை கட்டப்பட்டிருந்தது.
எதிரே புரஜெக்டர் இருந்தது. நண்பர்கள் புரியாமல் திகைத்துப் பார்த்தபடி இருந்தனர்.
அவர்களைப் பார்த்து ஜெர்கின்ஸ், ‘இப்போது உங்களுக்கு நாட்டியக்காரி ‘அன்னபெல்ரி’ என்ற சினிமாவைக் காட்டப்போகிறேன்’ என்று கூறி ஹாலின் கதவைப் பூட்டி விளக்குகளை
அணைத்தார். திரையில் அழகான இளம்பெண் ஆடினாள். நண்பர்கள் அனைவரும் திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடப் படம்தான் அது. படம் முடிந்ததும் விளக்குகளைப் போட்டார். நண்பர்கள் அதனை
நம்ப மறுத்தனர். தங்களுக்குத் தெரியாமல் அந்த ஹாலில் ஒரு பெண்ணை ஒளித்து வைத்து ஆடச்செய்ததாகக்
கூறினார்கள். மேஜிக் செய்ததாக சிலர் கூறினர். மொத்தத்தில் அவரை மோசடிக்காரன் என்று
குற்றஞ்சாட்டிவிட்டு அவரைத் திட்டியவாறே கலைந்து சென்றனர்.
சில நண்பர்களுக்கு முன் நடந்திருந்தாலும், உண்மையில் மக்கள் முன் திரையில் காட்டிய
உலகின் முதல் திரைப்படம் இதுதான். ஆனால் வரலாறு இதனை உலகின் முதல் திரைப்படம் என்று
ஏற்கவில்லை. காரணம், இந்த நிகழ்ச்சி
முறைப்படி செய்தியாளர்கள் அறிய பதிவுசெய்யப்பட்டு நிகழவில்லை.
அந்;த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர்
ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸின் அறிவியல் சாதனையை உணராமல் பிதற்றிவிட்டு போனாலும், அவர்களில் ஒருவர் மட்டும் அவரது அறிவியல்
திறனை அங்கீகாpத்தார். அவர்தான்
தாமஸ் ஆர்வார்ட் என்பவர். அவர் தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர். ஆர்வார்ட் அந்த புரொஜக்டாpல் இன்னும் முன்னேற்றங்களை செய்யலாமே
என்று ஜென்கின்ஸை கேட்டபோது, அவர் தன்னிடம் அதற்கு பணமில்லை என்றார். அந்தக் கருவியை தனக்கு விலைக்கு
கொடுக்க முடியுமா என்று தாமஸ் ஆர்வார்ட் கேட்டார். வறுமையில் இருந்த ஜென்கின்ஸ் சம்மதித்தார்.
வெறும் 2500 டாலரைக் கொடுத்துவிட்டு
அந்தக் கருவிகளையும் அவற்றின் உரிமைகளையும் ஜென்கின்ஸிடமிருந்து தாமஸ் ஆர்வார்ட் விலைக்கு
வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் எடிசனைக் காண ஓடினார். தாமஸ் ஆல்வா எடிசன் வியந்துபோனார்.
அக்கருவியில் சில முன்னேற்றங்களைச் செய்து உலகின் முதல் திரைப்படத்தை காட்டிவிடலாம்
என்று முனைந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக
முந்திக்கொண்டனர் லூமியர் சகோதரர்கள்.
லூமியர் சகோதரர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியே
வரும் தொழிலாளர்களை படம் பிடித்து அதை மற்றவர்களுக்கு இருட்டறையில் படம் போட்டு காட்டினர்.
சில வினாடிகளே ஓடினாலும் அதுதான் உலகின் முதற் திரைப்படம்.
இதுபோன்ற சிறு சிறு படங்கள் பலவற்றை எடுத்த லூமியர்
சகோதரர்கள் படம்பிடித்து அதை உலகில் உள்ள பல நகரங்களுக்கு சென்று மக்கள் முன் திரையிட்டுக்
காட்டினார்கள். அதில் ஒரு ப்ளாட்பாமில் வந்து நிற்கும் ரெயிலின் படம் மிகவும் பிரபலமாகியது.
பலரையும் திரைப்படத் துறைக்கு ஈர்த்தது.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post