Sunday, 4 May 2014

திரைப்படத் தயாரிப்பு 2014


நாம் ஒவ்வொருவரும் சினிமா பார்க்க ஆசைப்படுகிறோம். பலரும் திரையுலகைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றனர். அனைவரும் நடிகர்களையும் கரைஞர்களையும் பின்பற்றவும், கிசுகிசுக்களை ரசிக்கவும் வேண்டி திரையுலகினர் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.
இதில் சிலர் திரைப்படங்களை உருவாக்க ஆசைப்படுகின்றனர். அதற்காக நடிகர்களாகவோ, தொழில் நுட்பக் கலைஞர்களாகவோ படைப்பாளிகளாகவோ திரைத்துறையில் நுழைகின்றனர்.
அதில் ஒரு சிலர் மட்டுமே திரைப்படம் எடுக்கும் முறை பற்றி உண்மையில் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதிலும் வெகுசிலர் மட்டுமே திரைப்படத் தயாரிப்பு மற்றும் வியாபாரம் பற்றிய நடைமுறை பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பின் நிலையை அடுத்த கட்டத்துக்கு வளர்த்து கொண்டுசெல்ல பல முன்னோடிகளும் அவர்கள் வழியில் பல முயற்சிக்களை செய்து வந்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் வரும் ஒரு புதிய முயற்சிதான் இந்ததயாரிப்பாளர்கள் கூட்டுத் தயாரிப்பு“.
இது திரைப்படத் தயாரிப்பை முறைப்படுத்தப்பட்ட, மேலும் லாபம்தரும் தொழிலாக மாற்றுவதற்கான ஓரு முயற்சி, இந்தத் திரைப்படம் கலைத்தரமும் வியாபார மதிப்பும் கொண்ட முழுமையான பொழுதுபோக்குச் சித்தரமாக இருக்கும்.  
இது ஓரு மாற்று வியாபார முதலீடாகவும் திரைத்துறைக்குச் செய்யும் ஓரு சேவையாகவும் இருக்கும், அதனால் இது லாபத்தை மட்டுமல்லாமல் மனத்திருப்தியையும் தரும்,
இந்த திட்டம் படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் ஊருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும். புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் இந்த திட்டம் ஓரு தளமாக இருக்கும்
நீங்கள்
படத் தயாரிப்பு பற்றி அறிந்துகொள்ள விரும்பினால்,,,
நல்ல, வெற்றிப் படங்களை தயாரிக்க விரும்பினால்,,,
திரைத்துறையில் ஏதாவது சாதிக்க விரும்பினால்,,,  அல்லது
நல்லதொரு பரிசோதனை முயற்சியில் ஓரு ஆங்கமாய் விளங்கிட,,,           இந்த தயாரிப்பாளர்கள் கூட்டுத் தயாரிப்பில் இணைந்திடலாம்.
 இந்த திட்டத்தைப்பற்றிய அனைத்து விபரங்களும் ஏற்கனவே எழுதி புத்தகமாகவே வெளியிட தயாராக உள்ளது. ஆனால் இதை அச்சிடுவதற்கு முன்பாக இந்த விபரங்களை நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (குறைந்த பட்சம் அடுத்த பதிப்பை அச்சிடுவதற்கு முன்பு). அதனால் இந்த புத்தகத்தின் அத்தியாயங்களை இந்த வலைதளத்தில் பதிவுகளாக வெளியிடப்போகிறேன்.
திரைப்படம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்களும் திரைப்படம் எடுக்க விரும்புவர்களும் இதை படிக்க அழைக்கிறேன். கண்டிப்பாக இது உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை அச்சிட்டு வெளியிடும் முன் இதில் ஏதாவது திருத்தம், சேர்க்கை அல்லது மாற்றம் செய்ய உங்கள் அனைவருடைய அறிவுறைகளை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post