திரைப்படத் துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கவும், திரைப்படத் துறைக்கும் இலக்கியத்
துறைக்கும் மத்தியில் ஒரு பாலமாக அமையவும்தான் நான் திரைப்பட இலக்கியச் சங்சமத்தை ஆரம்பித்து
நடத்தி வருகிறேன்.
இந்த சங்கமங்களில் திரைப்படங்களின் உள்ளடக்கம், படைப்பாக்கம், தொழில்நுட்பம், தயாரிப்பு, வியாபாரம் போன்ற பல விஷயங்கள்
விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சங்கமத்தை மேலும் ஆக்கப்பூர்வமானதும் பயனுள்ளதாகவும்
ஆக்கிடும் முயற்சியின் அடுத்த கட்டமாகத்தான் ஒரு சிறப்பு திரைப்பட இலக்கியப் பெயர்காட்டியை
(Film Literature Directory) உருவாக்க திட்டமிட்டேன்.
மொழி எல்லைகளைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து திரைத்துறையினரையும் ஒன்றிணைக்கும்
ஒரு முயற்சியாகத்தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக குறைந்தபட்சம்
ஒரு பெயர;காட்டியிலாவது திரைத்துறையினர்
அனைவருடைய பெயரையும் இணைக்க ஆசைப்படுகிறேன்.
எடுத்தோம் கவுத்தோம் என்று திரைத்துறையினர் அனைவருடைய பெயர் மற்றும் தொலைபேசி எண்களை
இந்த பெயர்காட்டியில் சேர்க்க நான் விரும்பவில்லை. காரணம் இதை ஒரு சிலர் தவறாக பயன்படுத்த
வாய்ப்பிருக்கிறது.
அதனால் படிப்படியாக ஒவ்வொருவரையும் திரைக் கலைஞர்கள் வட்டம் அல்லது எழுத்தாளர்கள் வாசகர்கள் வட்டத்தில் இணைத்து, அவர்களுடைய அனுமதி பெற்று, அனைவருடைய அலுவலக எண்களை (Official numbers) மட்டுமே இந்த பெயர்காட்டியில்
இணைக்க இருக்கிறேன்.
பிரபலமான நடிகர்,
நடிகைகள், இயக்குநர்கள் போன்றோர் தங்கள்
அலுவலக எண்,
மேனேஜர; அல்லது உதவியாளர; எண்களை இந்த பெயர்காட்டியில்
இணைக்க தருவதுதான் நல்லது.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் ஒரு படியாக நான் ஆரம்பித்த என்னுடைய இந்த வலைப்பூவில் ஒரு பகுதியாக,
திரைத்துறைக்கு செய்யும்
ஒரு சேவையாகத்தான் நான் இந்த திரைப்பட இலக்கியப் பெயர்காட்டியை ஆரம்பித்தேன்.
திரைப்பட இலக்கியத்துறை நண்பர;கள் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள்
என நம்புகிறேன்.
தயாரிப்பாள்ர்களையும் படைப்பாளிகளையும் புரொபஷணலாக மாற்றுவதற்கு இது முதற்படியாக
விளங்கும்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post