அனுபவங்கள்
முடியாது அமைதியாக வழிநடத்த
என் ஆத்மாவை கலக்கும் எதையுமே,
சோர்வுற்ற காரியங்களை காணவும் முடியாது!
ஓய்வின்றி செல்லவேண்டும் முன்னோக்கி!
அழகாக அமைதியாக எல்லாம் நடந்திட,
மற்றவர்களுக்கானந்தம் அவ்வளவு!
பிறகு, தமக்குத்தாமே வாழ்த்துகின்றனர்,
நன்றியுடன் படிக்கின்றனர் தொழுகைவேளையில்!
முடிவுபெறா சண்டைகளில், எந்த
முடிவும் இல்லா ஆர்ப்பாட்டங்களில்,
முடிவுபெறாத கனவில் சிக்கினேன் நான்!
முடியாது வாழ்க்கையுடன் ஒத்துப்போக
முடியாது நீரோட்டத்துடன் சேர்ந்து நீந்த!
சொர்க்கம் முழுவதையும் உட்கொள்ளமுடியும்
உலகத்தை என்பக்கத்தில் சேர்த்திட!
அன்புகொண்டு வெறுப்புகொண்டு ஜொலிக்க
வேண்டுமென் நட்சத்திரம் என்று நினைத்தேன்!
தெய்வங்கள் தரும் வரங்கள் எல்லாம்
கைப்பற்ற வேண்டுமென முயற்சிப்பேன்,
உட்பொருள் எல்லாம் கற்றிட, கலையின்,
பாட்டின் ஆழங்களில் மூழ்கியிறங்கிட!
உலகங்களை நான் அழிப்பேன் ஒரேயடியாக!
உலகமொன்றை இனி படைப்பதெப்படி!
என் குரல் கேட்காத அவர்கள் செல்வது
எந்த மந்திரச்சுழிகளுக்கு உள்ளேயோ!
பிணமௌனம் கொண்டவர்கள்
நமது கருமங்களை
தூரத்தில் நின்று ஏளனமாக
உற்று பார்த்துக்கொள்ளவே,
தோன்றிய பாதையில் அவர்கள்
சோம்பலுடன் அலைந்திட?
அழுகிப்போகிறோம் நாம்!
நம்முடைய நூல்களும்!
தனதான ஆடம்பரத்தில்,
கெட்ட அகம்பாவத்தில்,
உயர்ந்த அலைகளில்
உலைந்தது, இரைச்சலில்
எங்கோ செல்வார்கள்
தன் கதிகளில்
பங்குகொள்ள என்னால்
முடியாது ஒருபோதும்!
வேகமான வீழ்ச்சியில், நாசத்தில்,
எட்டிய சாலைகள், குழிகள், மேடுகள்,
இரைச்சலில் பறந்து மறைந்திட,
இன்னொரு சாம்ராஜ்ஜியம் உயிர்பெறுகிறது!
ஒன்றுமில்லாததிலிருந்து எல்லாம்
உயிர்பெறுகிறதென்பதை சொல்கிறது கடல்!
தொட்டில் முதல் சுடுகாடுவரை
இன்னொரு உயர்வும் வீழ்ச்சியும்!
நல்லவழிகளில் செல்லும் திவ்யாத்மாக்கள்,
முற்றிலும் கரைந்த வீரமாகும் வரை!
சொந்த பிரபுக்கள், முதலாளிகள்
அவர்களுக்கு முடிவுகட்டி மறைக்கும்வரை!
அதனால் கடவுள் வரையும் சட்டத்தின்
பாதையில் தைரியமாக செல்லுங்கள்!
உயர்ந்து தாழும் அதிஷ்டத்திராசுடன்
பங்குபோட்டு அனுபவிக்கலாம் சுகதுக்கங்கள்!
எல்லாம் கெடுத்தும், செல்லுக
முன்னோக்கி ஓய்வும் சோர்வும் இல்லாமல்!
தூரத்தில், விரசமௌனமே, நிராசை
தரும் சோர்வே, சென்றிடு தூரத்தில்!
கனவுகள். கருமங்கள், பேராசைகள்,
பலனற்றதாக்கும் செயலின்மையில்,
வருத்தத்தின் நுகத்தின் கீழே, உள்ளுக்குள்
குமுறி நீ குனிந்து நிற்காதே!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post