அவன் அடிமுடியவளை கடுமையாக
பார்க்கிறான், ஆபத்தென்பதுபோல
அருகில் வருகிறான், ஆடுபவர்கள்
குளிர்ந்து சிலையாக மாறுகின்றனர்,
பயந்திடும் கண்கள் தங்களுக்குள்
ஏதோ கேள்விகள் வீசுகிறது!
தேவதைகள் அவள் மென்கழுத்தும்
மூச்சையும் இறுக்கியழுத்துவதுபோல!
ஆத்மாவில் கொஞ்சம் ஆறுதலுக்காக
பரிதவிப்பதுபோல! ஏதோ
பயத்தாலவள் வேலைக்காரிகளிடம்
அடைக்கலம் தேடுகிறாள்!
“நம்பிக்கை
துரோகம் செய்தவளாக
உன்னை நான் பார்க்கவேண்டுமா?
நீயே ஒருமுறை சமர்ப்பித்தாய் உன்னை
எனக்காக! சொல் லுசிந்தா! நீயினி
மற்றொருவனுக்கு மணமகளாக,
நம்பிக்கையை பலிகொடுத்தாயே நீ?”
நல்லொரு மேடையில் இப்படியொருவன்
நடப்பதை தாங்கமுடியாமல்
எல்லோரும் சேர்ந்தவனை தாக்க
பாய்ந்து வரும்போது, தாக்குதல்
அனைத்தையும் புல்லெனக்கண்டு
இடியென அலறுகிறான் வீரமாக,
“இடையில்வர
யாரும் முற்படவேண்டாம்”
அவன் கண்களில் துடிக்கும் உக்கிரம்
எச்சரித்தது தௌ;ளத் தெளிவாக!
கேட்கட்டும் எல்லோரும் எச்சரிக்கும்
அவன் சப்தம் கேட்கட்டும் கவனமாக
அவன் உள் சாபத்தின் சப்தம்!
பயம்வேண்டாம்! நானவளை துன்புறுத்த
மாட்டேன், இன்றிந்த இரவில் யாரும்
அவளை காயப்படுத்துவதில்லை!
ஒரு நாடகம் அவளின் சந்தோஷத்திற்காக
அரங்கத்தில் நான் நடக்கிறேன்
அவள் காண, கண்டு ரசித்திட மட்டும்!”
“நிறுத்தவேண்டாம்
இனி நடனம்!
தொடரட்டும் பாட்டும் கூத்தும்!
உன் புதுமாப்பிளையை கட்டி
அணைக்கும் நேரம் வருகிறது!
நான் என்ற தடை உடனே செல்லும்!
என் திருமணவிழாவும் கொண்டாட
வேண்டும் நான் இந்த மாலையில்,
கண்டேன் நான் இன்னொருவழி, என்
புதுப்பெண் இந்த இரவும் வாள்முனையும்!
உன் கண்களிலிருந்து ஊற்றிக்
குடிக்கட்டுமா நான் காமசுகம்,
பிறகதன் கவர்ச்சியெனும் ஒளியும்
ஆஹா! கண்டுவிட்டேன் உன்
முகபாவனை, பார்த்துக்கொள் இனி
என் உயிரிலிருந்து உதிரும் உதிரம்!”
தன் கைகளேந்திய தங்கப்பிடிவாள்
நெஞ்சத்திற்குள் அழுத்தினான் நொடியில்,
உடைந்துடைந்து துண்டுகளானது
உயிரின் கம்பிகள், சோர்ந்த
கண்களில் கடுமை இருட்டின்
பாரம் இடிந்து மூடி பரந்தது!
நடுங்கி நிலத்தில் விழுகிறது உடல்,
பிளர்ந்தது தசைகள், மரணம்
கட்டியணைக்கிறது கவுரவத்துடன்
கம்பீரமாயெழும் அங்கமொவ்வொன்றும்!
நித்திரையிலிருந்து இனியவனை
எழுப்பாது எந்ததெய்வமும், எல்லாம் சாந்தம்,
ஒருவார்த்தையும் சொல்லாமல் அவள்
வந்தெடுத்தாள் வாளும் கத்தியும்,
சாமியாடும் வேகத்தில் தன்னுடலை
அறுத்து முறித்தாள் பைத்தியம்போல!
ஊற்றுக்கள் உடைவதுபோல சென்னிற
ரத்தம் காயங்களிலிருந்து கொட்டியது!
சிதறிய உதிரம் கண்டதும்
பயந்துநின்றாள் ஒரு வேலைக்காரி
ரத்தத்தில் ஆடும் கத்தியை
தட்டியெடுத்தாள் மாற்றினாள்,
மரணம் அறுவடைசெய்ய வந்த உலோகத்தை
மலா;மேனியிலிருந்து பறித்தெடுத்தாள்!
துடித்துவிழுந்தாள் லுசிந்தா,
கடும்வலியுடன் காதலனின்
பிணத்தின்மீது, குடித்தாள் அந்த
இதயத்திலிருந்துவரும் ரத்தத்தை!
பதிலுக்கு ஊற்றுகிறாள் அவள்
தன் இதய ரத்தத்தை காதல்தீர்த்தமாக!
அவள் மலர்மேனியில் மின்னும்
மெல்லிய சருமத்தின் வெளியெல்லாம்
சிவக்கிறது விடாமல் சொட்டும்
ரத்தக்கரை படிவதனால்!
எங்கும் பரவுகிறது அவை நீளமாக
கொதித்துஎழும் சிவப்புநுரைபோல!
உயிரற்ற காதலன் உடலை மார்பில்
அழுத்தித்தழுகி விம்மி விம்மி
அழுகிறாள் அவள், களிமண்ணில்
புத்துயிர் கொடுத்து எழுப்பிட
திறமை இருந்திருந்தால் பாவம்
வாழ்ந்திருப்பாள் மீண்டும்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post