Tuesday, 22 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் – 9

                                                          Marx- Jenni

ஒரு அப்பாவி கன்னிப்பெண்
-         ஒரு கதைப்பாடல்

கன்னிப்பெண் நிற்கிறாள் அழகின்றி
மௌனமாய் பின்வாங்குவதுபோல,
தேவதைகளுக்கென்பதுபோல
இனிமைதரும் இந்த ஆத்மா
சின்னாபின்னமானது கஷ்டபாரங்களால்!

ஒற்றைக்கதிரும் ஜொலிப்பதில்லை அங்கே
தட்டுத்தடுமாறி விழும் அலைகள்!
நீங்களங்கே அன்புதுக்கங்கள் இரண்டையும்
தங்களுக்குள் ஏமாற்றி விளையாடுகிறீர்.

அமைதியாய் அடக்கமாய் கம்பீரமானவள் அவள்,
சொர்க்கத்திற்கு என்றும் நம்பிக்கையானவள்,
பேரழகுகள் நூற்றெடுத்த நித்திய
பரிசுத்த உருவம்- அதுதான் அவள்!

ஒரு படைக்குதிரைமேல் வருகிறான்
ஒரு படைவீரன் அப்பொழுது, அவன்
ஜொலிக்கும் கண்களில் ஒரு அன்புக்கடல்
அலையடித்து ஆர்ப்பரிக்கிறது!

அன்பு கடைகிறது கன்னிமனம், ஆனால்
மிகுந்த வேகத்தில் அவன் பாய்ந்து வருகிறான்,
போரில் வெற்றிபெற பேராசை, இல்லை
ஒரு எண்ணம் சற்றிங்கு நின்றுசெல்ல.

எல்லா மனசாந்தியும் இழந்தன, சொர்க்க
மெல்லம் எங்கேயோ மறைந்தது, இதயம்
துக்கத்திற்கான சிம்மாசனமானது, கன்னி
மோகங்களை குடித்து சோர்ந்துவிடுகிறாள்!

பிறகு பகல்முடிவுக்கு வந்திட, வீட்டின்
திண்ணையில், யேசுவின் புண்ணிய உருவத்தின்
முன்னால் தலைகுனிந்து முட்டியிட்டு
கன்னியவள் மீண்டும் ஒருமுறை வேண்டுகிறாள்!
மற்றொருவரப்பொழுது ஓடிவந்து
சேர்ந்திடுகிறார் கன்னியின் இதயத்தை
உடனே தன்னுடையது மட்டுமாய் மாற்றிட!
அவள் எவ்வளவு வெறுத்து மறுத்தாலும்!

எனக்கென்றைக்கும் எனக்காக நீ உன்
அன்பை சமர்ப்பித்தாய், பிறகு நீ எதற்கு
உன் ஆத்மாவை சொர்க்கத்திற்கு முன்
நிறுத்துகிறாய்? வெறும் நாடகம் எதற்கு?

பயந்து நடுங்கி குளிh;ந்து துடித்தவள்
ஓடி வெளியில் இருட்டில் மறைகிறாள்,
கரையாம்பல்பு+போல வெண்மை கைகள்
அழுத்தி நசுக்குகிறாள், கண்ணீர் பொழிகிறாள்!
எரியும் தீயில் என் மார்பு கொதிக்கிறது,
முற்றும் எதிர்பார்ப்பில் இதயமும்

அப்படி இழந்தேன் நான் சொர்க்கமும்!
நன்றாக எனக்கு தெரியும் இன்றதெல்லாம்!
கடவுளிடம் நன்றியிருந்த ஒரு அப்பாவி
ஆத்மாவுக்கு நரகமானது இந்த விதி!

என்ன உயரம்! தெய்வீக உயரம் அந்த
கண்களில் காண்பது எவ்வளவு ஆழம்!
எவ்வளவு நல்லவன் எவ்வளவு அழகானவன்
அவர், அந்த கருணை பார்வை ஒரு
நாளும் என்மீது விழவில்லை ஆசை
அறுந்து உருகட்டும் நான் என்னுயிர் கெடும்வரை!
எவ்வளவு மென்மையான தன்கரம் இன்னொரு
கைத்தலத்தை நாளை அணைக்கலாம்
இன்னொருவருடன் ஆனந்தம் பங்குபோடலாம்!
எதுவும் மனப்பு+ர்வமல்லாமலே அவரிந்த
துக்கத்தை என்மீதுவைக்கிறார் ஏராளமாய்!

முழுமனதுடன் விடைசொல்லலாமென்
ஆத்மாவிடமென் எதிர்பார்ப்புகளுடனும்
சிறிதென்னை பார்த்திருந்தால் அவா;
என்முன்னால் தன்னிதயம் திறந்தால்!

புன்னகை பொழிந்தவர் அங்கில்லையென்றால்
சொர்க்கமும் உற்சாகம் இல்லாமல்போகும்,
துக்கங்களால் தீபிடித்து நிற்கும் ஒரு
திசையாக மாறிடும் கஷ்டங்களின் தரிசுநிலம்..

இதயத்தின் ரத்தத்தில் மூழ்கும் ஒரு அக்னியை,
உள்ளங்கை பூவிடும் இனிமைசுகத்தை,
எல்லாம் குளிரச்செய்தவளை இந்த ஆர்ப்பரிக்கும்
வள்ளம் விடுவித்திருந்தால்

முடிந்தவரை பலமாக அந்த நீர்வீழ்ச்சியில்
ஓடிக்குதித்து விழுகிறாள், இரவின் மிகக்
குளிர்ந்த கருப்பு கரங்களில் நேராக
விழுகிறாள் நொடியில் மறைகிறாள்!

எரியும் நெருப்புபோலிருந்த இதயம்
ஒரேயடியாக குளிர்ந்துபோனது!
கன்னியின் பார்வையாம் ஒளியின் எல்லையை
ஒன்றாக மூடிப்போர்த்தியது மேகங்கள்!

வெளிறி வண்ணமற்ற இனிமையான அவளுடைய
உதடுகள், மென்மையில்லையென்றாலும்
தெய்வீகஒளி எழும் அவளுடைய உடல்
தவறி சூனியமல்லாதிடத்தில் விழுகிறது.

இல்லை ஒரு இலைகூட அடர்ந்து விழ
வில்லை விருட்ச சிகரங்களிலிருந்து
சொர்க்கமும் பூமியும் காதைமூடி அப்படி
நிற்கிறது அவளை எழுப்பாமல்!

அவளுடைய வெறும் எலும்புக்கூடு
பாறைகள்சேர்ந்த திசையில் முட்டிமோதுவதற்கு
கடலாகாய அலைகள் மாமலை
அடிவாரங்கள் எல்லாம் கடந்து சென்றது!

அப்படைவீரனோ தன்னுடைய புது
காதலை கட்டி அணைக்கிறான்.
சித்தேன் இனிமையாக பாடுகிறது,

உண்மைக் காதலின் அனுபவத்தைப்பற்றி..!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post