ஓடிப்போகலாம்
-
ஒரு கதைப்பாடல்
இரும்பால் உருவாக்கிய முன்கதவுபக்கம்
நிற்கிறான் அந்த படைவீரன்.
அன்பான அழகான பெண்ணவள்
அவ்வழியை பார்த்து நிற்கிறாள்.
“அன்பான
ஏய், படைவீரனே!
கீழே எந்தவழி நான் வருவேன்?”
எங்கும் அமைதியின் குளிர்ந்த
இருளின் முடி ஆட்சியாம்!
“நானிதை
வீசித்தருகிறேன், பிடித்துக்கொள்,
உன் உயிரை காப்பாற்ற இது உதவும்!
மேலே இதன் ஒரு முனையை இறுக்குகிறேன்,
இந்த கயிற்றின்வழியாக கீழே இறங்கலாம்!”
“ஏய்! படைவீரனே!
உன்னருகில் நான்
பறந்து வந்துகொண்டிருக்கிறேன்..
இன்றொரு திருடனைப்போல! காதலுக்காக
நான் என்னதான் செய்யமாட்டேன்!”
“அருமைக்காதலியே,
நீ
அடைவதிப்பொழுது
உன்னுடைய சொந்தம்தான்!
ஆடிமறைந்து செல்லும் நிழல்களைப்போல
நாம் ஓடி தப்பித்துவிடுவோமே!”
“ஏய்,
படைவீரனே!
கீழே கும்மிருள் எல்லாம்
கலைந்துவிடப்போகிறது!
என் ஐம்பொறிகள் சுற்றுகிறதே!
இனி என்னால் செல்ல முடியாது!
“நீ இப்பொழுதில்
விட்டுவிடுகிறாயா!
நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்!
ஒன்றுமில்லா பயங்களால், இருந்தும்,
உன்
உள்ளம் நடுங்குகிறதா!”
ஏய் படைவீரனே!
ஏய் படைமறவனே!
தீயிடம் நீ விளையாடுகிறாய்!
இருந்தாலும், நீ, ஆமாம்
நீ மட்டும்தான் என் நெஞ்சில்
குடியிருக்கும் மோகம்!
அன்பான பாதைகளே விடை தாருங்கள்
விடைதாருங்கள் ஒரேயடியாக!
இனியென் பாதங்கள் சுற்றியலையாதிங்கே!
நான் போய் வரட்டுமா?..”
“என்னுள்ளம்
கவர்ந்த உன்னிடம்
நான் எப்படி சண்டையிடுவேன்?
அன்புகெண்டவர்களே! உங்களனைவருக்கும்
நான் வாழ்த்துகிறேன் சுபராத்திரி!..”
பிறகு, முகூர்த்தத்திற்காக காத்திருக்கவில்லை,
தயங்கி அவள் நிற்கவுமில்லை!
குதித்துப்பிடித்தாள் அவள் அந்தக்கயிற்றை
கீழே இறங்கிடத்தான்!
பாதிவழி ஊர்ந்திறங்கவில்லை அதற்கு
முன்னவள் பயந்துநடுங்கினாள்!
பதட்டத்துடன் பார்வை, கை ஓய்ந்துபோகிறது
பிடிவழுக்கி மரணத்தின் மார்பில் விழுவதற்கா!..
“அன்பு
படைவீரனே! இன்னொருமுறை உன்
சிறுசூட்டை என் உடலுக்கு தா!
உன் கரங்களில் விழுந்துகிடந்த
ஒரு திருப்தியில் மரணத்தை ஏற்கலாம்
முகர்வேன் நான் உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்,
இனிமையாம் மௌனத்தில் நான் மறைவேன்!”
அந்த படைவீரன் கட்டி அணைத்தான்
மென்மையான அவ்வுடலை.
தன்மார்பில் அவன் பலமாக அழுத்துகிறான்
காதலியை நிறைந்த அன்புடன்.
ஒன்று சேர்ந்தது இரு இதயங்கள்! இறுக்கி
யழுத்தும் பரபரப்பில் கொடுமையானதொரு
வலி! துளைத்தேறுகிறது உள்ளே!
“அவ்வளவு
உண்மையாம்,
அவ்வளவு கருணை நிறைந்ததாம்
அன்பே! விடை கொடுத்திடு!”
“நில்!
வருகிறேன் உன் பின்னாலேயே
நான் எட்டிவிட்டேன், மிக அருகில்..”
அமர அக்னியின் நொடிமின்னல்! அதற்குள்ளே
அவர்களின் ஆத்மாக்கள் பயணம் ஆரம்பித்தன!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post