நான் திரைப்படத்துறையில்
இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும்
முயற்சியாகவும் திரைப்படத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாகவும்
திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தி வருகின்றேன். இதில் திரைப்படம் மற்றும் இலக்கியத்
துறையைச் சார்ந்த பிரமுகர்களும் நண்பர்களும் பங்குபெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில்
நான் இந்த சங்கமத்தை பத்து முறை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன்.
தற்பொழுது இம்முயற்சியை
மேலும் பயனுள்ளதாக்கிட, இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், எழுத்தாளர்கள்
மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து மாதம் ஒரு முறை திரைப்பட இலக்கியச் சங்கமம்
நடத்த திட்டமிட்டுள்ளேன். இச்சங்கமம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் படத்தின் தரத்தை
உயர்த்த உதவியாக இருக்கும்.
அத்துடன் தற்பொழுது
திரைப்படத்துறையைச் சார்ந்த (தொலைக்காட்சி, குறும்படம், ஆவணப்படம் உட்பட) பல்வேறு தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப
வல்லுநர்கள், உதவியாளர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கியத் துறையைச் சார்ந்தவர்கள்
அனைவரையும் ஒன்றிணைத்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு திரைப்படத்
தோழமைச் சங்கமம் நடத்த விரும்புகிறேன்.
இச்சங்கமம் திரைத்துறையில்
வெற்றிபெற்றவர்களுக்கும் வெற்றிபெற விரும்புவர்களுக்கும் மத்தியில் ஒரு உறவை ஏற்படுத்தி, அனைவரும்
வெற்றிபெற உதவியாக இருக்கும்,
தயாரிப்பாளர்களை
இயக்குநர்கள் சந்திக்க,
இயக்குநர்களை தயாரிப்பாளர்கள்
சந்திக்க,
தொழில்நுட்பக் கலைஞர்களை
இயக்குநர்கள் சந்திக்க,
இயக்குநர்களை தொழில்நுட்பக்
கலைஞர்கள் சந்திக்க,
இயக்குநர்களை நடிகர்கள்
சந்திக்க,
நடிகர்களை இயக்குநர்கள்
சந்திக்க,
எழுத்தாளர்களை திரைத்துறையினர்
சந்திக்க,
திரைத்துறையினரை
எழுத்தாளர்கள் சந்திக்க,
திரைத்துறையினரை
திரைப்பட மாணவர்கள் சந்திக்க,
நண்பர்களை நண்பர்கள்
சந்திக்க,
புதிய நண்பர்களை
அறிமுகம் செய்திட,
திறமைசாலிகளைத் தேடும் படைப்பாளிகளுக்கும், வாய்ப்புக்களைத்
தேடும் திறமைசாலிகளுக்கும் இந்த சங்கமங்களும் வலைதளமும் உதவியாக இருக்கும்.
11-வது திரைப்பட இலக்கியச் சங்கமமும் முதல் திரைப்படத் தோழமைச்
சங்கமமும் வருகின்ற
13-7-13
சனிக்கிழமை,
மாலை 6 மணிக்கு
சென்னை, வடபழனி, ஆற்காடு சாலையில்
(கமலா
தியேட்டர் அருகில்) உள்ள திரை இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் வைத்து நடைபெற
உள்ளது.
நமது சங்கமங்களில் சிறப்பு விருந்தினர்கள்
இதுவரையில்
திரு பாலுமகேந்திரா திரு ஆர்.சி.சக்தி
திரு என்.கே.விஸ்வநாதன் திரு ஆர்.கே.செல்வமணி
திரு பிறைசூடன் திரு
கே.குணா
திரு மு.களஞ்சியம் திரு ஜி.தனஞ்சயன்
திரு கவிதாபாரதி திரு சீனு ராமசாமி
திரு வ.கௌதமன் திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன்
திரு பாலி ஸ்ரீரங்கம் திரு தாமிரா
திரு தமிழ்மகன் திரு
எஸ்.ராமகிருஷ்ணன்
திரு பாஸ்கர்சக்தி திரு பெருதுளசிபழனிவேல்
திரு விஜயமுரளி திரு
ஐகோ
திரு பாலமுரளிவர்மன் திரு கேபிள்சங்கர்
திரு சுரேகா
திரு மதுமதி
மற்றும் திரு
புண்ணியா
இன்று முதல்
இவர்களுடன் நீங்களும்
தலைப்பு
தமிழ்ப்படங்கள்
2013 பிப்ரவரி முதல் ஜூன் வரை
(வனயுத்தம், ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், உதயம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டிப்புலி, நேரம், எதிர்நீச்சல், சூதுகவ்வும், தில்லு
முல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு)
இம்முயற்சியை வெற்றிபெறச்செய்ய, ஊக்குவிக்க, வாழ்த்த
திரைத்துறை மற்றும் இலக்கியத்துரையைச் சார்ந்தவர்களும் நல்ல திரைப்படங்களை விரும்பும்
அனைவரும் வாருங்கள்.
நன்றியுடன்
விஜயன்.B (கமலாபாலா)
தொலைபேசி: 9445376497
(இந்த சங்கமங்களை மென்மேலும் வெற்றிபெறச் செய்ய, அன்பிற்குரிய
நண்பர்களாகவும் மதிப்பிற்குரிய புரவலர்களாகவும் இன்றே இணைந்திடுவீர். மேலும்
விபரங்களுக்கு www.filmfriendship.com வலைத்தளத்தைப் பார்க்கவும்.)