முன்னுரை
நான் நடத்திவரும் திரைப்பட
இலக்கியச் சங்கமம் பற்றி அறிமுகம் செய்து எல்லோரையும் அதன்பால் ஈர்க்கவேண்டும்
என்றுதான் சினிமாவில் வெற்றிபெற ஒரு வழி என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தேன். அந்த எண்ணத்தில்தான்
சங்கமத்தின் அறிமுகத்தை இங்கே பதிவு செய்தேன்.
ஆனால் இந்த தலைப்பு என்னைத்தான்
வெகுவாக ஈர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது என்னை மீண்டும் எழுத தூண்டுகிறது.
திரை உலகில் எனக்குள்ள அனுபவம் குறைவுதான். இருந்தாலும் அதை அடிப்படையாகக்கொணடு
இந்த தலைப்பின்கீழ் சில குறிப்புகளை தந்தால் அவை சினிமாவில் வெற்றிபெறத் துடிக்கும்
கலைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சினமாவில் வெற்றிபெற
முதலில் சினிமாவை அறிந்துகொள்ளவேண்டும். சினிமாவின் அடிப்படை விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.
சினிமா அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றைப்பற்றி
ஓரளவு புரிந்துகொள்ளவேண்டும்.
சினிமா என்பது ஒரு கலை
அல்ல. அது பல கலைகளின் ஒரு கலவை. கண்ணால் பார்க்கப்படும் கலைகள், காதால் கேட்கப்படும்
கலைகள், மனதால் உணரப்படும் கலைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
ஒரு சித்திரத்தை ரசிக்க அதை
வரைந்த ஓவியனைப்பற்றி தெரிந்திருக்கவேணடும் என்ற அவசியம் இல்லை. தெரிந்திருந்தால்
அந்த சித்திரத்தின்மீது ஒரு ஈடுபாடு உண்டாகும். வண்ணங்களின் கலவைகள்பற்றி
தெரியவேணடிய அவசியம் இல்லை. வடிவங்களைப்பற்றி அறிந்தாலே போதும். கண்களை குளிரவைக்கும்.
சித்திரம் வரையும் நுட்பங்கள் தெரியவேண்டும் என்பது இல்லை. தெரிந்தால் ஆழமாக உணர்ந்து
ரசிக்க முடியும்.
அதுபோலதான் சினிமாவும். வெறுமெனவே
ரசிக்க அந்த சினிமா எடுத்தவனை தெரிந்திருக்கவேண்டியதில்லை. தெரிந்தால் படத்தைப்
பார்க்கும்பொழுது ஒரு ஈடுபாடு உணடாகும். சினிமாவை ரசிப்பது எப்படி என்று
தெரிந்தால் மனம் குளிரும். தொழில்நுட்பங்கள் தெரிந்திருந்தால் மேலும் ஆழமாக ரசிக்க
முடியும்.
சினிமாவில் வெற்றிபெற இந்த
அனைத்து விஷயங்களிலும் முதலில் ஒரு புரிதல் வேண்டும். நன்றாக
அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான். ஆனால் அது அடுத்தகட்டம். அதை பிறகு பார்க்கலாம்.
தற்பொழுது முதல்கட்டமாக அவற்றை புரிந்துகொள்ள முயறசிப்போம்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post